சினிமா செய்திகள்
விரைவில் தமிழில் வெளியாகும் தனுஷின் ஹாலிவுட் படம்!
கோலிவுட்டை தாண்டி பாலிவுட்டில் ராஞ்சனா மற்றும் ஷமிதாப் என நடிப்புக்கு முக்கியத்துவம் வாய்ந்த படங்களை கொடுத்த நடிகர் தனுஷ், அடுத்த கட்டமாக ஹாலிவு படமொன்றிலும் நடித்தார். அந்த படம் அடுத்த மாதம் தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் இந்தியாவில் வெளியாகிறது.
ஸ்பானிஷ் மொழி படமான தி எக்ஸ்ட்ராடினரி ஜார்னி ஆஃப் ஃபகிர் படம் கடந்த ஆண்டு இறுதியில் ஹாலிவுட்டில் வெளியானது. இந்த படத்திற்கு சமீபத்தில் மக்கள் விருதும் கிடைத்துள்ளது.
இந்நிலையில், இந்தியாவில் இந்த படத்தை வெளியிடும் முயற்சியில் ஈடுபட்ட வந்த தனுஷுக்கு வெற்றி கிடைத்துள்ளது. வெகுநாட்களாக தனுஷின் எனை நோக்கிப் பாயும் தோட்டா படம் கிடப்பில் உள்ளதால், கடுப்பாகியுள்ள அவரது ரசிகர்களை ஹாலிவுட் படம் மூலமாக குஷி படுத்த உள்ளார் நடிகர் தனுஷ்.
பக்கிரி என நம்ம ஊர் ஸ்டைலுக்கு படத்தின் தலைப்பை மாற்றி ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ள தனுஷ், வரும் ஜூன் 21ம் தேதி படம் வெளியாகும் என்ற அறிவிப்பையும் வெளியிட்டுள்ளார்.