கிரிக்கெட்

அதே இடம்… அதே நம்பர் முடிவு வேறு… சிறப்பான ஆட்டம் அணியினரே: பழைய ஷாஹித் அப்ரிடி டுவிட்!

Published

on

உலக கோப்பை டி20 கிரிக்கெட் போட்டியில் நேற்றைய இந்தியா – பாகிஸ்தான் போட்டியில் பாகிஸ்தான் அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் மிக அபாரமாக வென்றது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்திய அணியின் மிக நீளமான பேட்டிங் மற்றும் பும்ரா, புவனேஷ்வர் உள்ளிட்ட உலகத் தரமான பௌலர்கள் இருப்பதால் பாகிஸ்தானை எளிதில் வென்றுவிடும் என்றுதான் போட்டிக்கு முன்னர் அனைவரும் கணித்திருந்தனர். ஆனால் போட்டி ஆரம்பித்ததிலிருந்து முதல் ஓவரில் இருந்து பாகிஸ்தான் பக்கம் தான் போட்டி இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

முதல் ஓவரிலேயே ரோஹித் சர்மா அவுட், அடுத்ததாக கேஎல் ராகுல் விக்கெட் மற்றும் அடிக்க வேண்டிய நேரத்தில் விராட் கோலி விக்கெட்டை வீழ்த்திய ஷாஹித் அப்ரிடி நேற்று ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். அதேபோல் பேட்டிங்கின்போது பாபர் அசாம் மற்றும் முகமது ரிஸ்வான் ஆகிய இருவருமே இலக்கை எட்டிவிட்டனர் என்பதும் இந்திய பவுலர்களால் ஒரு விக்கெட்டை கூட எடுக்க முடியவில்லை என்பது மிகப்பெரிய அவமானகரமான ஒன்றாக கருதப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

நேற்றைய போட்டியில் பாகிஸ்தான் அணி மிக அபாரமாக வென்றதற்கு முக்கிய காரணம் ஷாஹித் அப்ரிடி எடுத்த 3 விக்கெட்டுகளே என ஐசிசி தனது டுவிட்டர் பக்கத்தில் பாராட்டியுள்ளது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் இதே மைதானத்தில் பழைய ஷாஹித் அப்ரிடி விளையாடிய போது பாகிஸ்தான் அணி தோல்வி அடைந்தது. ஆனால் தற்போது புதிய ஷாஹித் அப்ரிடி மிக அபாரமாக விளையாடி அணிக்கு வெற்றி தேடித் தந்ததை அடுத்து ’அதே இடம் அதே நம்பர் அதே ஆனால் முடிவு மற்றும் வேறு’ என்று ஐசிசி தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்து இருந்தது.

இதனை ஷாஹித் அப்ரிடி தன்னுடைய டுவிட்டரில் பகிர்ந்துள்ளார். இந்த பதிவை பாகிஸ்தான் மட்டுமன்றி உலகின் பல நாடுகளில் உள்ள கிரிக்கெட் ரசிகர்களும் பகிர்ந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் பழைய பாகிஸ்தான் அணியின் ஷாஹித் அப்ரிடி அணிந்திருந்த அதே 10ஆம் நம்பர் ஜெர்ஸியை தான் நேற்றைய போட்டியின் ஆட்டநாயகனாக ஷாஹித் அப்ரிடி அணிந்து இருந்தார் என்பது ஒரு அபூர்வமான ஒற்றுமையாக கருதப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

seithichurul

Trending

Exit mobile version