கிரிக்கெட்

இந்தியாவில் நடக்கும் உலகக்கோப்பையில் பங்கேற்க மாட்டோம்: எச்சரிக்கும் பாகிஸ்தான்!

Published

on

வரும் செப்டம்பர் மாதம் பாகிஸ்தானில் நடைபெற உள்ள ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் பங்கேற்க இந்தியா மட்டும் பாகிஸ்தான் வராவிட்டால் இந்தியாவில் நடைபெற உள்ள ஒருநாள் உலகக் கோப்பை தொடரில் பங்கேற்க மாட்டோம் என தெரிவித்துள்ளார் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் நஜம் சேத்தி.

#image_title

6 அணிகள் பங்கேற்கும் 16 வது ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் செப்டம்பர் மாதம் பாகிஸ்தானில் நடைபெற உள்ளது. இந்நிலையில் இந்தியா, பாகிஸ்தான் இடையே நிலவி வரும் சீரற்ற உறவுநிலை காரணமாக இந்திய அணி பாகிஸ்தானில் விளையாட முடியாது, அதற்கு பதிலா ஐக்கிய அரபு அமீரகம் போன்ற பொதுவான நாட்டில் நடத்தப்பட வேண்டும் என பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா வலியுறுத்தினார். இதனை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் கடுமையாக எதிர்த்துள்ளது.

ஆசிய கோப்பை தொடர்பான கூட்டத்தில் பங்கேற்ற பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் நஜம் சேத்தி, ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரானது பல நாடுகள் பங்கேற்கும் தொடர். இந்திய அணிக்கு மிக உயரிய பாதுகாப்பு வழங்க பாகிஸ்தான் அரசு உறுதியாக உள்ளது. எனவே பாகிஸ்தானில் நடைபெறும் ஆசிய கோப்பை போட்டியில் இந்தியா பங்கேற்காவிட்டால், பாகிஸ்தான் கிரிக்கெட் அணி இந்தியாவில் நடைபெறும் ஒருநாள் உலகக் கோப்பை போட்டியில் பங்கேற்காது என்றார்.

Trending

Exit mobile version