உலகம்

சீனா உதவியுடன் சவுதி அரேபியாவுக்கு 2 பில்லியன் டாலர் பணத்தைத் திருப்பி அளித்த பாகிஸ்தான்!

Published

on

சவுதி அரேபியாவுக்குப் பாகிஸ்தான் திருப்பி அளிக்க வேண்டிய 3 பில்லியன் டாலர் பணத்தில், 1 பில்லியன் டாலர் பணத்தைச் சீனாவின் உதவியுடன் பாகிஸ்தான் திருப்பி அளித்துள்ளது.

பாகிஸ்தானுக்கு சவுதி அரேபியா 3 பில்லியன் டாலர் கடன் மற்றும் 3.2 பில்லியன் டாலர் கச்சா எண்ணெய் கடன் வசதியையும் 2018-ம் ஆண்டு வழங்கியது. அந்த கடன் தொகையை இதுவரை பாகிஸ்தான் திருப்பி அளிக்காமலிருந்து வந்தது.

இந்நிலையில், காஷ்மீர் பிரச்சனையில் இந்திய மனித உரிமைகளை மீறுவதாகச் சவுதி அரேபியாவிடம் பாகிஸ்தான் ஆதரவு கேட்டது. அதில் ஏற்பட்ட சில பிரச்சினைகள் காரணமாகப் பாகிஸ்தானுக்குச் சவுதி அரேபியா அளித்த பணத்தைத் திருப்பி அள்குறாறு கூறியது. மேலும் கடனில் கச்சா எண்ணெய் வழங்கி வந்ததையும் சவுதி நிறுத்தியது.

அதில் முதல் தவணையாக ஜூன் மாதம் 1 பில்லியன் டாலர் பணத்தைப் பாகிஸ்தான் சவுதி அரேபியாவிடம் கொடுத்தது. நிதி நெருக்கடியில் உள்ள பாகிஸ்தானால் மீதம் உள்ள பணத்தைத் திருப்பி செலுத்த முடியவில்லை.

இந்நிலையில் அதில் 1 பில்லியன் டாலர் பணத்தைச் சீனா உதவியுடன் பாகிஸ்தான் சவுதி அரேபியாவுக்குத் திருப்பி அளித்துள்ளது. மீதம் உள்ள 1 பில்லியன் டாலர் பணத்தை ஜனவரி மாதம் பாகிஸ்தான் திருப்பி அளிக்கும் என்று தெரிவித்துள்ளது.

ஆசியாவில் உள்ள ஏழை நாடுகளுக்குக் கடன் வழங்குவது போல வரும் சீனா, அந்த நாடுகளை தங்களது வலையில் விழ வைத்து மிரட்டி வருவதாக அமெரிக்கா குற்றம்சாட்டி வருகிறது. பாகிஸ்தான் தங்களுக்கு உள்ள பிரச்சினையைத் தீர்க்க சீனாவின் வலையில் சிக்கியதா என்றும் வரும் நாட்களில் தெரியவரும்.

இந்தியாவின் நட்பு நாடுகளாக உள்ள அனைத்து நாடுகளுக்கும் சீனா கடன் கொடுத்துள்ளது. அதனால் கடல் வழி எல்லையைத் தவறாகச் சீனா பயன்படுத்துகிறது. இது இந்தியாவுக்கு மிகப் பெரிய அச்சுறுத்தலாக உள்ளது என்றும் கூறப்படுகிறது.

seithichurul

Trending

Exit mobile version