உலகம்

எங்களாலும் பதிலடி கொடுக்க முடியும்: இந்தியாவுக்கு இம்ரான்கான் எச்சரிக்கை

Published

on

எங்களாலும் இந்தியாவுக்கு பதிலடி கொடுக்க முடியும் என்றும் ஆனால் பொறுமையுடன் இருந்து விட்டோம் என்றும் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் ராஜஸ்தான் மாநிலத்தில் ஏவுகணை ஒன்று தவறுதலாக விண்ணில் சீறிப் பாய்ந்து பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் உள்ளது. இதில் சில குடியிருப்புகள் சேதமடைந்ததாக பாகிஸ்தான் தரப்பு கூறியது .

இந்த நிலையில் இந்த சம்பவம் குறித்து பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் கூறிய போது இந்திய ஏவுகணை பாகிஸ்தானில் விழுந்ததற்கு உடனடியாக எங்களாலும் பதிலடி கொடுக்க முடியும். ஆனால் பொறுமையாக இருந்து விட்டோம் என்று கூறினார் .

முன்னதாக இந்திய தூதரக அதிகாரியை பாகிஸ்தான் அரசு அழைத்து தனது கண்டனத்தை தெரிவித்தது என்பதும் இத்தகைய அலட்சியத்தால் இரு நாட்டின் இடையே விரும்பத்தகாத விளைவுகள் ஏற்படும் என்றும் மிரட்டல் விடுத்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து பாதுகாப்புத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் பராமரிப்பு பணியின் போது இந்த ஏவுகணை தவறுதலாக பாகிஸ்தான் எல்லையில் விழுந்ததாகவும் இதனால் யாருக்கும் எந்தவித பாதிப்பும் இல்லை என்பது ஆறுதல் அளிக்க கூடியதாக இருந்தாலும் வருத்தத்துக்குரியது என்றும் தெரிவித்துள்ளது. மேலும் இது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாக மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

 

Trending

Exit mobile version