உலகம்

இன்று ராஜினாமா செய்கிறார் இம்ரான்கான்: பாகிஸ்தானில் ராணுவ ஆட்சியா?

Published

on

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் இன்று தனது பதவியை ராஜினாமா செய்யப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது .

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் அதிகாரபூர்வமான யூடியூப் சேனலில் பிரதமர் அலுவலகம் என்ற பெயர் நீக்கப்பட்டு வெறும் இம்ரான்கான் என்று மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ளதை அடுத்து அவர் இன்று நடைபெற இருக்கும் பொதுக்கூட்டத்தில் தனது ராஜினாமா முடிவை அறிவிக்க இருப்பதாக கூறப்படுகிறது .

பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் இம்ரான் கான் மீதான ஆட்சியின் மீது நம்பிக்கை வாக்கெடுப்பு நாளை நடைபெற உள்ளது. இந்த வாக்கெடுப்பில் எதிர்க்கட்சியினர் மட்டுமின்றி சொந்த கட்சியை சேர்ந்தவர்களும் இம்ரான்கான் ஆட்சிக்கு எதிராக ஓட்டு போடப் போவதாக கூறப்படுகிறது.

இதனை அடுத்து நாளை நடைபெறும் வாக்கெடுப்பில் இம்ரான்கான் ஆட்சி கவிழும் என்பதல் அதற்கு முன்னதானாகவே ராஜினாமா செய்ய முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது .

இதனை அடுத்து பாகிஸ்தானில் எதிர்க்கட்சியின் ஆட்சி நடக்குமா அல்லது ராணுவ ஆட்சி நடக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

 

seithichurul

Trending

Exit mobile version