கிரிக்கெட்

நான் மட்டும் ஐபிஎல் ஏலத்தில் இருந்திருந்தால்? கேலிக்குள்ளான பாகிஸ்தான் வீரரின் டுவிட்!

Published

on

நான் மட்டும் ஐபிஎல் ஏலத்தில் இருந்திருந்தால் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் ஒருவர் தனது டுவிட்டரில் பதிவு செய்த டுவிட்டை நெட்டிசன்கள் கேலியும் கிண்டலும் செய்து வருகின்றனர்.

ஐபிஎல் கிரிக்கெட் போட்டி உலகம் முழுவதும் பிரபலம் என்பதும் இந்த கிரிக்கெட் போட்டியில் விளையாடுவதற்கு உலகில் உள்ள அனைத்து வீரர்களும் மிகுந்த ஆர்வத்துடன் இருப்பார்கள் என்பதும் தெரிந்ததே. அதுமட்டுமன்றி பணம் கொழிக்கும் போட்டியாக இந்த தொடர் உள்ளது என்பதும் ஒவ்வொரு வீரருக்கும் லட்சக்கணக்கில் கோடிக்கணக்கில் வருமானம் கிடைக்கும் ஒரு வழியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால் ஐபிஎல் தொடரில் முதலாவது சீசனில் இருந்தே பாகிஸ்தான் வீரர்கள் சேர்க்கப்படவில்லை. இந்தியாவுக்கு அடிக்கடி பாகிஸ்தான் ராணுவ ரீதியாக தொல்லை கொடுத்துக் கொண்டிருப்பதால் அவர்கள் சேர்க்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் பாகிஸ்தான் வீரர் ஷாயின்ஷா அஃப்ரிடி தனது டுவிட்டர் பக்கத்தில் நான் மட்டும் ஐபிஎல் ஏலத்தில் பங்கு பெற்று இருந்தால் 200 கோடிக்கு ஏலம் போய் இருப்பேன் என ட்வீட் செய்துள்ளார். இந்த டுவிட்டை இந்திய ரசிகர்கள் கேலியும் கிண்டலும் செய்து வருகின்றனர்.

ஐபிஎல் தொடரில் உள்ள ஒவ்வொரு அணிக்கும் மொத்தமே 80 கோடிதான் லிமிட் என்ற நிலையில் 200 கோடிக்கு ஏலம் போய் இருப்பேன் என அவர் பதிவு செய்திருப்பது அவரது அறியாமையை காட்டுவதாக நெட்டிசன்கள் கூறிவருகின்றனர்.

seithichurul

Trending

Exit mobile version