கிரிக்கெட்

விராத் கோஹ்லியை பின்னுக்கு தள்ளிய பாகிஸ்தானின் பாபர் அசாம்!

Published

on

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலியை பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டன் பாபர் அசாம் பின்னுக்கு தள்ளி ஐசிசி ஒரு நாள் கிரிக்கெட் தரவரிசையில் முதலிடத்தை பிடித்துள்ளார்.

சற்றுமுன் ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் தரவரிசை வெளியாகியுள்ள நிலையில் இதில் பாபர் அசாம் 865 புள்ளிகள் எடுத்து உள்ளதை அடுத்து இரண்டாம் இடத்தில் இருந்து முதல் இடத்திற்கு முன்னேறியுள்ளார். விராட்கோலி 857 புள்ளிகள் எடுத்து உள்ளதால் அவர் முதலிடத்தில் இருந்த இரண்டாம் இடத்திற்கு கீழே இறங்கி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மூன்றாமிடத்தில் ரோகித் சர்மா, நான்காமிடத்தில் டெய்லர், ஐந்தாமிடத்தில் பின்ச், ஆறாமிடத்தில் பெயர்ஸ்டோ, ஏழாமிடத்தில் டுப்லஸ்ஸிஸ், எட்டாமிடத்தில் ஃபாகர்கான், ஒன்பதாமிடத்தில் வார்னர் மற்றும் பத்தாம் இடத்தில் ஷாய்ஹோப் ஆகியோர் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவில் விராத் கோஹ்லி தற்போது இரண்டாவது இடத்தில் இருந்தாலும் புள்ளிகள் வித்தியாசம் குறைவாகவே இருப்பதால் அடுத்தடுத்து போட்டிகள் நடைபெறும் போது மீண்டும் முதல் இடத்தை பிடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Trending

Exit mobile version