சினிமா

பாகிஸ்தானில் பாலிவுட் படங்களுக்கு வருகிறது தடை?

Published

on

பாகிஸ்தானில் பாலிவுட் படங்களுக்கு தடை விதிக்க வேண்டும் என அந்நாட்டு திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் கோரிக்கை வைத்துள்ளது.

பாலிவுட் படங்களுக்கு பாகிஸ்தானில் அமோக வரவேற்பு இருப்பதால், பாகிஸ்தானில் தயாரிக்கப்படும் படங்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றன. இதனால், பாலிவுட் படங்களை பாகிஸ்தானில் வெளியிட தடை விதிக்க வேண்டும் என பாகிஸ்தான் பட தயாரிப்பாளர்கள் சங்கம் ஒன்றாக இணைந்து பாகிஸ்தான் அரசிடம் கோரிக்கையை வைத்துள்ளது.

மேலும், பாகிஸ்தானிய படங்களை இந்தியா திரையிடுவதில்லை. ஆனால், நாம் மட்டும் ஏன், இந்திய படங்களுக்கு பாகிஸ்தானில் திரையிட அனுமதி வழங்குகிறோம். சல்மான் கான், ஷாரூக்கான் மற்றும் ஆமீர்கானின் படங்கள் பாகிஸ்தானில் பெருமளவு வசூலை ஈட்டி வருவது குறிப்பிடத்தக்கது.

வரும் தீபாவளிக்கு ஆமீர்கானின் தக்ஸ் ஆஃப் இந்தோஸ்தான் படம் ரிலீசாகவுள்ள நிலையில், அந்த படத்தை குறி வைத்து பாகிஸ்தான் தயாரிப்பாளர்கள் சங்கம் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.

இந்தியா – பாகிஸ்தான் ஒற்றுமையை நாடும் இம்ரான் கான் இதில், என்ன முடிவெடுக்கவுள்ளார் என்பது விரைவில் தெரிய வரும்.

 

Trending

Exit mobile version