கிரிக்கெட்

இந்திய பெண்ணை திருமணம் செய்ய உள்ள பிரபல பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்!

Published

on

இந்தியாவின் பிரபல டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவை பாகிஸ்தான் வீரர் சோயிப் மாலிக் திருமணம் செய்துகொண்ட நிலையில் தற்போது மீண்டும் ஒரு பாகிஸ்தான் வீரர் இந்திய பெண்ணை திருமணம் செய்துகொள்ள உள்ளார்.

இந்தியாவின் ஹரியானவை சேர்ந்த ஷாமியா அர்ஜு என்ற பெண் இங்கிலாந்தில் பொறியியல் படித்துவிட்டு, தனியார் விமான நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வருகிறார். இவரது பெற்றோர் துபாயில் வசித்து வருகின்றனர். இந்நிலையில் ஷாமியா அட்ஜுவை பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் பந்துவீச்சாளர் ஹசன் அலி திருமணம் செய்ய உள்ளதாக பாகிஸ்தான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஷாமியா அர்ஜுவின் பெற்றோர் துபாயில் வசித்து வரும் நிலையில் அவர்களை ஹசன் அலியின் குடும்பத்தினர் சந்தித்து பேசியதாகவும். இவர்களது திருமணம் துபாயில் வைத்து ஆகஸ்ட் 20-ஆம் தேதி நடக்க உள்ளதாக பாகிஸ்தான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

seithichurul

Trending

Exit mobile version