கிரிக்கெட்

டி20 உலகக்கோப்பை கிரிக்கெட்… ஒரே குழுவில் இந்தியா- பாகிஸ்தான்..!

Published

on

டி20 உலகக்கோப்பை தொடரில் ஐசிசி வெளியிட்டுள்ள அட்டவணைப்படி இந்தியா மற்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் அணிகள் ஒரே குழுவில் விளையாடுகின்றன.

வருகிற அக்டோபர் மாதம் முதல் நவம்பர் மாதம் வரையில் டி20 உலகக்கோப்பை போட்டிகள் துபாய் மற்றும் ஓமன் ஆகிய நாடுகளில் நடைபெற உள்ளது. இந்த உலகக்கோப்பைக்கான அணிகளின் பிரிவுகள் குறித்து ஐசிசி அட்டவணை வெளியிட்டுள்ளது. இதில் சூப்பர் 12 மற்றும் முதற்கட்ட ஆட்டங்களுக்கான குழு விவரங்கள் வெளியாகி உள்ளன.

ICC Men's T20 World Cup groups announced

இந்த அட்டவணையின் அடிப்படையில் க்ரூப் 1 பிரிவில் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா, வெஸ்ட் இண்டீஸ் ஆகிய அணிகளும் க்ரூப் 2 பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், நியூசிலாந்து, ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகள் இடம் பெற்றுள்ளன. இதந் இறுதியில் க்ரூப் 1 வெற்றியாளரும் க்ரூப் ரன்னரும் ஒரு போட்டியில் மோதுவார்கள். அதேபோல் க்ரூப் 2 வெற்றியாளரும் க்ரூப் 1 ரன்னரும் மோதுவர்.

சூப்பர் 12 சுற்றுக்கு முன்னதாக தகுதிச் சுற்று இரண்டு பிரிவுகளாக நடைபெறும். இதற்கு முன்னதாக கடந்த 2019-ம் ஆண்டு நடைபெற்ற டி20 உலகக்கோப்பை போட்டியில் இந்தியா- பாகிஸ்தான் கிரிக்கெட் அணிகள் மோதிய போது இந்திய அணியே வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

Trending

Exit mobile version