உலகம்

கார், மொபைல்போன், காஸ்மெட்டிக் பொருட்களுக்கு தடை: பாகிஸ்தான் அரசு

Published

on

கார், மொபைல்போன் உள்பட ஆடம்பர பொருட்களின் இறக்குமதிக்கு பாகிஸ்தான் அரசு தடை விதித்துள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் பரபரப்பை ஏற்படுத்திஉள்ளது .
உலகெங்கும் தற்போது பொருளாதார சிக்கலில் வருகிறது என்பதும் அமெரிக்க டாலருக்கு நிகரான மற்ற நாடுகளின் மதிப்பு கடும் வீழ்ச்சி அடைந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது .

குறிப்பாக இந்தியாவின் அண்டை நாடான இலங்கை கடுமையான பொருளாதார சிக்கலில் இருக்கும் நிலையில் இன்னொரு அண்டை நாடான பாகிஸ்தான் நாட்டின் பொருளாதாரத்தில் கடும் சரிவு ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் வெளிநாட்டிலிருந்து அத்தியாவசியற்ற ஆடம்பரமான பொருட்களை இறக்குமதி செய்வதற்கு தடை விதித்து அந்நாட்டு அமைச்சர் உத்தரவு பிறப்பித்துள்ளர். இந்த உத்தரவில் கார்கள், மொபைல் போன்கள், வீட்டு உபயோகப் பொருள்கள், அழகு சாதன பொருட்கள் ஆகியவற்றை இறக்குமதி செய்ய தடை என அறிவித்துள்ளார். இருப்பினும் எத்தனை ஆண்டுகளுக்கு இந்த தடை இருக்கும் என்பது குறித்த எந்தவித அறிவிப்பும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இருப்பினும் கச்சா எண்ணெய், சமையல் எண்ணெய் ஆகியவை இறக்குமதி செய்ய எந்தவித தடையும் இல்லை என்று அமைச்சர் தெரிவித்துள்ளார். ஆடம்பரப் பொருள்கள் இறக்குமதி செய்யப்படுவதால் பாகிஸ்தான் நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்து வருவதாகவும் செலவை கட்டுப்படுத்தவதற்காகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு இருப்பதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார். பாகிஸ்தான் அரசின் இந்த உத்தரவு நாட்டு மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

 

seithichurul

Trending

Exit mobile version