சினிமா செய்திகள்

நிச்சயம் சார்பட்டா-2 உண்டு… ஆனால் அங்க ஒரு ட்விஸ்ட்!- சீக்ரெட் பகிரும் பா.ரஞ்சித்

Published

on

சார்பட்டா 2-ம் பாகம் நிச்சயம் உண்டு எனத் தெரிவித்துள்ள இயக்குநர் பா.ரஞ்சித் அதில் ஒரு சின்ன ட்விஸ்ட் ஒன்றையும் பகிர்ந்துள்ளார்.

பா.ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடிப்பில் சமீபத்தில் வெளியாகி ஹிட் அடித்தத் திரைப்படம் சார்பட்டா பரம்பரை. பல ஹிட் படங்களுக்கும் இரண்டாம் பாகம் வருமா எனக் கேட்பது தற்போது ரசிகர்களின் வாடிக்கையாகி உள்ளது. அதேபோல், இரண்டாம் பாகங்களும் தொடர்ச்சியாக வரத் தான் செய்கின்றன.

இந்த சூழலில் சார்பட்டா பரம்பரை படத்துக்கும் இரண்டாம் பாகம் உண்டா என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. இதுகுறித்து படத்தின் இயக்குநர் பா.ரஞ்சித் சில விஷயங்களைப் பகிர்ந்துள்ளார். அவர் கூறுகையில், “சார்பட்டா படத்துக்கு நிச்சயமாக இரண்டாம் பாகம் உண்டு. ஆனால், முதல் பாகத்தின் தொடர்ச்சியாக இருக்காது. மாறாக முதல் பாகத்தின் முன் கதையாக இரண்டாம் பாகம் வெளிவரும்.

சீக்வெல் ஆக இல்லாமல் ப்ரீக்வெல் ஆக சார்பட்டா 2 இருக்கும். சார்பட்டா 1970-களில் நடந்த கதையாக இயக்கப்பட்டு இருக்கும். இரண்டாம் பாகத்தில் 1925-களில் நடக்கும் கதையாக கதைக்களம் அமைக்க உள்ளேன். முதல் பாகத்தில் சொல்ல முடியாது போன பல விஷயங்களை 2-ம் பாகத்தில் சொல்ல முடிவு செய்துள்ளோம். குறிப்பாக, இரண்டாம் பாகம் சினிமாவாகத் தான் இருக்கும் என சொல்ல மாட்டேன். இரண்டாம் பாகத்தை வெப் சீரிஸ் ஆக இயக்கவும் ஆலோசித்து வருகிறோம்” என்றார்.

author avatar
seithichurul

Trending

Exit mobile version