தமிழ்நாடு

நீட் விலக்கு மசோதாவை திருப்பி அனுப்பிய விவகாரம்: இயக்குனர் பா ரஞ்சித் கருத்து!

Published

on

தமிழக அரசு சட்டமன்றத்தில் தாக்கல் செய்த நீட் விலக்கு மசோதாவை திருப்பி அனுப்பியது குறித்து கருத்து தெரிவித்த இயக்குனர் பா ரஞ்சித் இது தமிழக மக்களுக்கு எதிரானது என்று கூறி உள்ளார்.

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தமிழக மாணவர்களுக்கு நீட் விலக்கு வேண்டும் என்பதை வலியுறுத்தி இன்று சட்டமன்றத்தில் நீட் விலக்கு மசோதா தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதா கவர்னர் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்ட நிலையில் ஐந்து மாதங்கள் கழித்து இந்த மசோதாவை கவர்னர் திருப்பி அனுப்பினார்.

இது அரசியல் உலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் நீட் விலக்கு மசோதாவை மீண்டும் சட்டமன்றத்தில் தாக்கல் செய்வதற்காக பிப்ரவரி 8ஆம் தேதி சிறப்பு கூட்டம் நடைபெற உள்ளதாக அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் நேற்று முடிவு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ஆளுநர் .ஆர்.என். ரவி அவர்கள் நீட் விலக்கு மசோதாவை திருப்பி அனுப்பியதற்கு கண்டனம் தெரிவித்து பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் நேற்று நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட இயக்குனர் பா ரஞ்சித் நீட் விலக்கு மசோதாவை ஆளுநர் திருப்பி அனுப்பியது குறித்து கூறியதாவது:

ஆளுநரின் செயல்பாடு மிகவும் தவறானது என்றும் தமிழ் மக்கள் விரும்புகின்ற உணர்வை திருப்பி அனுப்புவது என்பது தமிழ் மக்களுக்கு எதிரானது என்றும் தெரிவித்துள்ளார்.

இருப்பினும் நீட் விலக்கு மசோதாவை திருப்பி அனுப்பியது குறித்து மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் மத்தியில் இருந்து எந்தவிதமான எதிர்ப்பும் கிளம்ப வில்லை என்பதும் அரசியல்வாதிகள் மட்டுமே எதிர்ப்புகளை எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

seithichurul

Trending

Exit mobile version