சினிமா செய்திகள்

பாலிவுட்டில் பிர்சா முண்டா படத்தை இயக்கும் பா. ரஞ்சித்!

Published

on

ரஜினியின் கபாலி மற்றும் காலா படம் மூலம் சர்வதேச அங்கீகாரம் பெற்ற இயக்குநர் பா. ரஞ்சித், அடுத்ததாக பாலிவுட்டில் ஒரு புதிய படத்தை இயக்கவுள்ளார்.

சுதந்திர போராட்ட தியாகி மற்றும் பழங்குடியின மக்களின் சுதந்திரத்திற்காக போராடிய பிர்சா முண்டாவின் வாழ்க்கையை தான் பா.ரஞ்சித் இயக்கவுள்ளார். இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று வெளியிடப்பட்டுள்ளது.

பியாண்ட் தி கிளவுட்ஸ் படத்தை தயாரித்த நமா பிக்சர்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது. அடுத்த ஆண்டு மே மாதம் இந்த படத்தின் படப்பிடிப்புகள் துவங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அறம் படத்தின் இயக்குநர் கோபி நயினார் இயக்கத்தில் ஜெய் – ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் உருவாகி வரும் புதிய படமும் பிர்சா முண்டாவின் வாழ்க்கையை மையப்படுத்தி உருவாகி வருவது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக கோபி நயினாரின் கதையை திருடி பா. ரஞ்சித் மெட்ராஸ் படத்தை இயக்கியதாகவும் ஒரு குற்றச்சாட்டு உள்ளது.

author avatar
seithichurul

Trending

Exit mobile version