சினிமா செய்திகள்

தமிழக அரசின் பெருமைக்குரிய விருதினை பெற்ற பி.சுசீலா!

Published

on

பிரபல பின்னணி பாடகி பி சுசிலா அவர்கள் கடந்த 1953 ஆம் ஆண்டில் இருந்து கிட்டத்தட்ட 60 ஆண்டுகளுக்கும் மேல் திரைப்படங்களில் பாடி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் பி சுசிலா ஏற்கனவே பல விருதுகளை பெற்ற நிலையில் தற்போது அவருக்கு மேலும் ஒரு விருது கிடைத்துள்ளது.

2019ஆம் ஆண்டு கால ஜெயலலிதாவின் சிறப்பு கலைமாமணி விருதை தமிழக அரசு சுசீலாவுக்கு சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. இந்த விருது வழங்கும் விழா கடந்த சில வாரங்களுக்கு முன்னர் நடைபெற்ற நிலையில் மருத்துவரின் அறிவுரை காரணமாக பி சுசிலா அந்த விழாவில் பங்கேற்கவில்லை.

இதனை அடுத்து இயல் இசை நாடக மன்ற அதிகாரி ஹேமநாதன் என்பவர் சுசிலாவின் இல்லத்திற்கு சென்று அந்த விருதை வழங்கி கவுரவித்தார். அந்த விருதை மகிழ்ச்சியுடன் பெற்றுக் கொண்ட பி சுசிலா தமிழக அரசுக்கு நன்றியை தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜெயலலிதாவின் சிறப்பு கலைமாமணி என்ற விருது பெரும் முதல் இசைக்கலைஞர் பி சுசிலா தான் என்பது பெருமைக்குரிய விஷயமாகும். பிசுசீலா தனக்கு கிடைத்த விருதுடன் கூடிய புகைப்படத்தை இணையதளங்களில் பதிவு செய்துள்ள நிலையில் அந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

Trending

Exit mobile version