தமிழ்நாடு

அவசர அவசரமாக வேட்பாளரை அறிவித்த திமுக: ப. சிதம்பரம் காரணமா?

Published

on

தமிழகத்தில் காலியாக உள்ள 2 ராஜ்யசபா உறுப்பினர் பதவிக்கு அக்டோபர் 4 ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில் திடீரென இன்று திமுக வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர் என்பது தெரிந்ததே. திமுக வேட்பாளராக முன்னாள் எம்பி என்விஎன் சோமு அவர்களின் மகள் டாக்டர் கனிமொழி அவர்களும், ராஜேஷ் குமார் அவர்களும் அறிவிக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

திமுக வேட்பாளர் பரிசீலனை கூட நடைபெறாமல் திடீரென திமுக தலைமையிடம் இருந்து இந்த அறிவிப்பு வெளிவந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் இதற்கு காரணம் காங்கிரஸ் பிரமுகர் ப சிதம்பரம் தான் என்று செய்திகள் வெளியாகி இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப சிதம்பரம் அவர்கள் தமிழகத்திலிருந்து ராஜ்யசபா எம்பியாக தேர்வு செய்ய விரும்பியதாகவும் இதற்காக அவர் திமுக தலைமையிடம் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் கூறப்பட்டது. ப சிதம்பரம் மட்டுமின்றி இன்னும் ஒரு சிலரும் பேச்சுவார்த்தை நடத்தி உள்ளனர்.

காங்கிரஸ் பிரமுகர் குலாம்நபி ஆசாத் மற்றும் தமிழக காங்கிரஸ் தலைவர் கேஎஸ் அழகிரி ஆகியோர்களும் தமிழகத்திலிருந்து ஒரு ராஜ்யசபா எம்பி பதவியின் மூலம் பாராளுமன்றம் செல்ல விருப்பத்தை தெரிவித்துள்ளனர். இதற்காக திமுக தலைமையுடன் பேச்சுவார்த்தை நடத்தியதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் காங்கிரஸ் தலைமை நேரடியாக இது குறித்து தன்னிடம் பேசுவதற்கு முன்னால் அவசர அவசரமாக திமுக மாநிலங்களவை உறுப்பினர் வேட்பாளரை திமுக அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதனை அடுத்து ப சிதம்பரம் உள்பட காங்கிரஸ் பிரமுகர்களின் ராஜ்யசபா எம்பி கனவு தகர்ந்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. வேட்பாளராக அறிவிக்கப்பட்ட இருவரும் நிச்சயம் வெற்றி பெற்று விடுவார்கள் என்பதால் ராஜ்யசபாவில் மேலும் 3 எம்பிகள் திமுகவுக்கு கூடுதலாக கிடைத்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

seithichurul

Trending

Exit mobile version