இந்தியா

சுவரேறி குதித்து ப.சிதம்பரத்தை அதிரடியாக கைது செய்த சிபிஐ: அரசியலில் பரபரப்பு!

Published

on

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரத்தின் முன் ஜாமீன் நிராகரிக்கப்பட்டதையடுத்து அவரை கைது செய்ய சிபிஐ, அமலாக்கத்துறை அதிக தீவிரம் காட்டியது. ஆனால் அவர் இருக்கும் இடம் தெரியாமல் அதிகாரிகள் அவரை கைது செய்ய முடியாமல் திணறினர்.

இந்நிலையில் நேற்று இரண்டு 8 மணியளவில் ப.சிதம்பரம் டெல்லியில் உள்ள காங்கிரஸ் அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் அளித்தார். அவருடன் காங்கிரஸ் மூத்த வழக்கறிஞர்கள் கபில் சிபல், சல்மான் குர்ஷித், அபிஷேக் சிங்வி, வேணுகோபால் ஆகியோர் இருந்தனர். இதனையடுத்து ப.சிதம்பரம் அவர்களுடன் தனது வீட்டிற்கு சென்றார்.

சிபிஐ அதிகாரிகளும் அவரை பிந்தொடர்ந்து விசாரணை நடத்த சென்றனர். ஆனால் சிதம்பரம் சென்றவுடன் வீட்டுக் கதவு பூட்டப்பட்டதால் சிபிஐ அதிகாரிகள் உள்ளே செல்ல முடியாமல் வெளியே காத்திருந்தனர். இதனையடுத்து போனில் ஆலோசனை நடத்திய அதிகாரிகள் பின்னர் சுவரேறி குதித்து வீட்டிற்குள் சென்றனர்.

சிதம்பரம் வீட்டின் முன்புற கேட்டிலிருந்து பின்புற கேட் வரை சிபிஐ மற்றும் அமலாக்கத் துறை அதிகாரிகளின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. இரவு 9.45 மணி அளவில் சிதம்பரத்தை கைது செய்து அவரது இல்லத்திலிருந்து காரில் சிபிஐ அதிகாரிகள் அழைத்துக் கொண்டு புறப்பட்டனர்.

seithichurul

Trending

Exit mobile version