தமிழ்நாடு

தமிழக அரசை கலந்தாலோசிக்காமல் அனுப்பப்படும் ஆக்சிஜன்: மத்திய அரசு மீது விஜயபாஸ்கர் குற்றச்சாட்டு

Published

on

தமிழக அரசை கலந்தாலோசிக்காமல் தமிழகத்தில் உற்பத்தியாகும் ஆக்சிஜனை அண்டை மாநிலங்களுக்கு மத்திய அரசு அனுப்ப முடிவு செய்துள்ளதற்கு தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கண்டனம் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் அதிகரித்து வருவதை அடுத்து நோயாளிகள் அதிகம் பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் ஒவ்வொரு நோயாளிகளுக்கும் ஆக்சிஜன் தேவைப்படுகிறது. இந்த நிலையில் தமிழகத்தில் தயாராகும் ஆக்சிஜனை வைத்து தமிழக அரசு மருத்துவமனைகள் சமாளித்து வரும் நிலையில் திடீரென தமிழகத்தில் தயாராகும் 45,000 மெட்ரிக் டன் ஆக்சிஜனை ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் அனுப்ப மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

தமிழகத்தில் உற்பத்தி செய்யப்படும் ஆக்சிஜனை தமிழக அரசை கலந்தாலோசிக்காமல் மத்திய அரசு ஆந்திரா, தெலுங்கானாவுக்கு அனுப்ப முடிவு செய்துள்ளதற்கு அமைச்சர் விஜயபாஸ்கர் கண்டனம் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தின் தேவைக்கு ஆக்சிஜன் பற்றாக்குறை இருக்கும் நிலையில் மற்ற மாநிலங்களுக்கு மத்திய அரசு அனுப்ப முடிவு செய்தது சரியா என்றும் பொதுமக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

seithichurul

Trending

Exit mobile version