தமிழ்நாடு

தமிழக அரசு நடவடிக்கை எதிரொலி: ஸ்டெர்லைட்டில் ஆக்சிஜன் உற்பத்தி நிறுத்தம்!

Published

on

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் கொரோனா வைரஸ் பாதிப்பு தமிழகத்தில் மிக அதிகமாக இருந்ததை எடுத்து ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜனை உற்பத்தி செய்ய சுப்ரீம் கோர்ட் அனுமதி அளித்தது. ஆனால் மூன்று மாதங்களுக்கு மட்டும் தான் அனுமதி என்று நிரந்தரமாக செயல்பட அனுமதி இல்லை என்றும் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி நிபந்தனை விதித்திருந்தது

இந்த நிலையில் நாளையுடன் சுப்ரீம் கோர்ட் விதித்த காலக்கெடு முடிவடைவதை அடுத்த ஸ்டெர்லைட் ஆலை தொடர்ந்து இயங்க அனுமதிக்க வேண்டும் என ஸ்டெர்லைட் ஆலை தரப்பிலிருந்து சுப்ரீம் கோர்ட்டில் முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது

இந்த நிலையில் தமிழகத்தில் தற்போது ஆக்சிஜன் பற்றாக்குறை இல்லை என்றும் அதனால் ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தியை நீட்டிக்க தேவையில்லை என தமிழக அரசு அதிரடியாக வாதம் செய்தது.

இந்த நிலையில் தமிழக அரசின் அதிரடி நடவடிக்கை காரணமாக தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜனை உற்பத்தி நிறுத்தப்பட்டு உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. ஆக்சிஜன் உற்பத்திக்கான அனுமதி முடிவடையும் நிலையில் தொடர்ந்து ஸ்டெர்லைட் ஆலையை இயக்க வாய்ப்பில்லை என தமிழக அரசு வாதம் செய்ததை அடுத்து ஸ்டெர்லைட் ஆலையில் உற்பத்தி நிறுத்தப்பட்டு உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது

இந்த நிலையில் தமிழக அரசின் இந்த முடிவு குறித்து திமுக எம்பி கனிமொழி கூறியதாவது: தமிழ் நாட்டில் தற்போது ஆக்சிஜன் பற்றாக்குறை இல்லை எனவே தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையின் ஆக்ஸிஜன் உற்பத்தியை நீடிக்க வேண்டியதில்லை, என்ற தமிழ் நாடு அரசின் முடிவிற்கு நன்றி. தமிழ் நாட்டு மக்களின் உணர்வை பிரதிபலிக்கும் விதமாக இனி ஒருபோதும் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை இயங்காது என்ற உறுதிமொழியை காப்பாற்றிய தமிழ் நாட்டின் முதலமைச்சர் திரு ஸ்டாலின் வர்களுக்கு நன்றி என குறிப்பிட்டுள்ளார்

seithichurul

Trending

Exit mobile version