தமிழ்நாடு

ஸ்டெர்லைட் ஆக்சிஜன் முழுவதும் தமிழகத்திற்கே: சுப்ரீம் கோர்ட் உத்தரவு

Published

on

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் தயாரிக்க நேற்று சுப்ரீம் கோர்ட்டு அனுமதி வழங்கியது என்பதை பார்த்தோம். இருப்பினும் ஸ்டெர்லைட் ஆலையில் தயாராகும் ஆக்சிஜன் முழுவதையும் தமிழகத்திற்கே வேண்டும் என்ற தமிழக அரசின் கோரிக்கைக்கு மத்திய அரசு மறுப்பு தெரிவித்தது

மத்திய அரசுக்குத்தான் ஸ்டெர்லைட்டில் தயாராகும் ஆக்சிஜன் அனுப்ப வேண்டும் என்றும் மத்திய அரசு எந்த மாநிலத்துக்கு தேவையோ அந்த மாநிலத்திற்கு பிரித்துக் கொடுக்கும் என்றும் தெரிவித்திருந்தது

இந்த நிலையில் இன்று இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது ஸ்டெர்லைட்டில் தயாராகும் ஆக்சிஜன் அனைத்துமே தமிழகத்திற்கு தான் வழங்க வேண்டும் என சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. அதுமட்டுமின்றி தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் ஜூலை 31 வரை மட்டுமே ஆக்சிஜன் தயாரிக்க அனுமதி என்றும் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது

ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் தயாரிக்க மே ஜூன் ஜூலை ஆகிய மூன்று மாதங்கள் மட்டுமே தற்காலிக அனுமதி வழங்கியுள்ளதை அடுத்து ஸ்டெர்லைட் ஆலையில் இன்னும் ஓரிரு நாளில் ஆக்சிஜன் தயாரிக்கும் பணி தொடங்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் ஸ்டெர்லைட் ஆலையில் தயாராகும் ஆக்சிஜன் முழுவதுமே தமிழகத்திற்கு வழங்க உத்தரவு இருப்பதால் தமிழகத்தில் ஆக்சிஜன் தட்டுப்பாடு குறையும் வாய்ப்பு இருப்பதாகவும் கருதப்படுகிறது.

Trending

Exit mobile version