தமிழ்நாடு

சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் கலனில் கசிவா?

Published

on

சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் ஆக்சிஜன் கலனில் கசிவு ஏற்பட்டு இருப்பதாக ஒரு சில ஊடகங்களில் தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில் அதற்கு சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை டீன் விளக்கம் அளித்துள்ளார்.

சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் ஆக்ஸிஜனை சேமித்து வைக்கும் கலனில் இருந்து நேற்று இரவு முதல் ஆக்சிஜன் கசிந்து வருவதாகவும் இதனால் நோயாளிகளுக்கு பயன்படுத்த வேண்டிய ஏராளமான ஆக்சிஜன் வீணாகி இருப்பதாகவும் ஒரு சில ஊடகங்களில் செய்திகள் வெளிவந்துள்ளன.

இதுகுறித்து சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் டீன் தேரணிராஜன் அவர்கள் கூறியபோது சென்னை ’ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் ஆக்சிஜனில் கசிவு இல்லை என்றும் கலனின் அடிப்பகுதியில் பனிக்கட்டி படலம் உருகுவதால் ஏற்படும் ஆவி என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும் சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் ஆக்சிஜனை உற்பத்தி செய்யும் வசதி இல்லை என்றும், தனியார் நிறுவனத்திடம் இருந்துதான் ஆக்சிஜன் வரவழைக்கப்படுகிறது என்றும் சமூக வலைதளங்களில் ஆக்சிஜன் கசிந்து வருவதாக பரவி வரும் தகவல் தவறானது என்றும் டீன் தேரணிராஜன் அவர்கள் தெரிவித்துள்ளார்.

ஒரு சில ஊடகங்கள் பொறுப்பில்லாமல் வேண்டுமென்றே அரசு மீது பழி சுமத்த வேண்டும் என்பதற்காகவே இதுபோன்ற செய்திகளை பரப்பி வருவதாக நெட்டிசன்கள் கூறிவருகின்றனர்.

Trending

Exit mobile version