தொழில்நுட்பம்

ஓன்மீ வைரஸ்.. ஆண்ட்ராய்ட் போன்களை தாக்க தொடங்கியது.. என்ன நடக்கிறது?

Published

on

சென்னை: ஆண்ட்ராய்ட் போன்களை சமீப காலமாக ஓன்மீ (Ownme) என்ற வைரஸ் தாக்கி வருவதாக குற்றச்சாட்டு வைக்கப்பட்டு இருக்கிறது.

ஆண்ட்ராய்ட் போன்களை மட்டும் குறிவைத்து களமிறங்கி இருக்கும் வைரஸ்தான் ஓன்மீ (Ownme) என்ற வைரஸ்.

இது போன்களில் தானாக தரவிறங்கி அந்த போன்களை பெரிய அளவில் பாதிக்க வைக்கிறது என்று குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளது. தனிப்பட்ட தகவல்களை திருடவே இந்த வைரஸ் உருவாக்கப்பட்டுள்ளது.இந்த ஓன்மீ (Ownme) என்ற வைரஸ் போன்களில் நாம் இணையத்தை பயன்படுத்திக் கொண்டு இருக்கும் போதே பின்பக்கம் டவுன்லோட் ஆகிவிடும்.

கிரிப்டோஜாக்கிங் என்ற முறையில் இந்த ”அட்டாக்” நிகழ்த்தப்படுகிறது . நம்முடைய இணைய பயன்பாடும், நாம் தேடும் சில குறிப்பிட்ட தளங்களும் இந்த வைரஸ் உள்ளே வர கதவாக இருக்கிறது.

இது அதிகமாக பாதிப்பது வாட்ஸ் ஆப்பைதான். ஆம், வாட்ஸ் ஆப்பிள் நாம் பேசும் தகவல்களை அதிகம் திருடவே இந்த வைரஸ் பயன்படுத்தப்படுகிறது.

Trending

Exit mobile version