தமிழ்நாடு

ரேஷன் கடைகள் மாற்றம்: தமிழக அரசு அறிவிப்பு!

Published

on

தமிழகத்தில் உள்ள 6,970 ரேஷன் கடைகள் இடமாற்றம் செய்யப்படும் என கூட்டுறவு சங்க பதிவாளர் அறிவித்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

தமிழகத்தில் தற்போது 6,970 ரேஷன் கடைகள் வாடகை கட்டடங்களில் இயங்கி வரும் நிலையில் இந்த கட்டிடங்கள் அனைத்துக்கும் சொந்த கட்டிடம் கட்டுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன

தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள 6,970 ரேஷன் கடைகளுக்கும் கட்டிடம் கட்ட ஏதுவாக உள்ள இடங்களை கண்டறிந்து ரேஷன் கடைகளுக்கு புதிய கட்டடங்கள் கட்டும் பணி விரைவில் தொடங்கும் என்று தெரிகிறது

இதுகுறித்து கூட்டுறவு வங்கி கூட்டுறவு சங்க பதிவாளர் சண்முகசுந்தரம் அவர்கள் சொந்த கட்டிடம் தொடர்பாக மண்டல இணைப்பதிவாளர் கடிதம் எழுதியுள்ளார். இதனை அடுத்து விரைவில் 6,970 ரேஷன் கடைகளுக்கும் சொந்த இடம் முடிவு செய்யப்பட்டு கட்டடம் கட்டும் பணிகள் தொடங்கும் என்றும் கூட்டுறவு சங்க வட்டாரங்கள் கூறுகின்றன.

இன்னும் ஓரிரு வருடங்களில் அனைத்து தமிழகத்தில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளும் சொந்த கட்டிடம் தான் இயங்கும் என்றும் கூறப்பட்டுள்ளது

Trending

Exit mobile version