சினிமா
ஆபாச வசனங்கள், முத்தக்காட்சிகள்: 90 எம்.எல் விமர்சனங்களுக்கு ஓவியா பதிலடி!
பிக்பாஸ் புகழ் நடிகை ஓவியா நடித்துள்ள 90 எம்.எல் திரைப்படத்தின் ட்ரெய்லர் சமீபத்தில் வெளியானது. இதில் ஆபாச வசனங்கள், புகைப்பிடித்தல், மது அருந்துதல், முத்தக்காட்சிகள் என நிறைந்துள்ளது ட்ரெய்லர். இதனையடுத்து இதற்கு சமூக வலைதளங்களில் பலவாறு விமர்சனங்கள் எழுந்தது.
அனிதா உதீப் இயக்கியுள்ள இந்த படத்திற்கு சிம்பு இசை அமைத்துள்ளார். ஆபாசம் நிறைந்துள்ள இந்த படத்துக்கு ஏ சான்றிதழ் கிடைத்துள்ளது. இந்நிலையில் படம் குறித்தான விமர்சனத்துக்கு நடிகை ஓவியா தனது டுவிட்டர் பக்கத்தில் பதிலடி கொடுத்துள்ளார்.
அதில், பழத்தை ருசிப்பதற்கு முன்பாகவே விதையை பற்றி தீர்மானித்துவிடாதிர்கள். சென்சார் செய்யப்பட்ட முழு படத்தை பொறுத்திருந்து பாருங்கள் என டுவீட் செய்துள்ளார். இதற்கும் ஆதரவாகவும், எதிராகவும் பலர் கருத்து தெரிவித்துள்ளனர்.