சினிமா செய்திகள்

புதிய மலையாள படத்தில் ஓவியா!

Published

on

9 ஆண்டுகளுக்கு பிறகு மலையாள படம் ஒன்றில் நடிக்கப்போகிறார், நடிகை ஓவியா.

மலையாள நடிகையான ஓவியா, தமிழ் திரையுலகில் பல படங்கள் நடித்துள்ளார். களவாணி படத்தில் விமலுக்கு ஜோடியாக அறிமுகமான நடிகை ஓவியா, தமிழ் சினிமாவில் தொடர்ந்து பல படங்கள் நடித்து வந்தார்.

ஆனால், சில படங்களை தவிர்த்து பல படங்கள் அவருக்கு தோல்வியை கொடுத்தன. இதனால், பிக்பாஸ் நிகழ்ச்சியில் நுழைந்த ஓவியாவிற்கு மக்கள் மனதில் நல்ல இடம் மற்றும் வரவேற்பு கிடைத்தது. பிக்பாஸில் இவரைப் போன்று பிரலமானவர்கள் இல்லை. பிக்பாஸ் வீட்டில் உள்ள போதே ஓவியாவிற்கு வெளியே நல்ல வரவேற்பு இருந்தது.

தமிழ், தெலுங்கு, இந்தி படங்களில் நடித்து வந்த ஓவியா தற்போது மீண்டும் தனது தாய் மொழியான மலையாளத்தில் புதிய படம் ஒன்றில் நடிக்க கமீட் ஆகியுள்ளார். 9 ஆண்டுகளுக்கு பிறகு மலையாளத்தில் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

seithichurul

Trending

Exit mobile version