இந்தியா

பிக்சட் டெபாசிட்டை புதுப்பிக்காவிட்டால் என்ன நடக்கும் தெரியுமா? ஒரு அதிர்ச்சி தகவல்!

Published

on

சேமிக்கும் பணம் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பதற்காக வங்கிகளில் பிக்சட் டெபாசிட்டில் வாடிக்கையாளர்கள் பணம் போட்டு வைப்பது உண்டு. அந்த பணத்திற்கு மூத்த குடிமக்கள் என்றால் 5.5% வட்டியும் மற்றவர்களுக்கு 5 சதவீதம் வட்டியும் கிடைக்கும்.

பணத்திற்கு பாதுகாப்பு என்பதால் பலர் பிக்சட் டெபாசிட்டில் தங்களுடைய சேமிப்பை போட்டு வருகின்றனர். குறிப்பாக ஓய்வு பெற்றவர்கள் தங்களுக்கு கிடைத்த பணத்தை மொத்தமாக பிக்சட் டெபாசிட்டில் போட்டு அதில் கிடைக்கும் வட்டியை வைத்தே செலவுக்கு வைத்துக் கொள்வர் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் வங்கிகளில் வாடிக்கையாளர்கள் போட்ட பிக்சட் டெபாசிட் கால அவகாசம் முடிந்து அதனை புதுப்பிக்க தவறினால் அந்த தொகைக்கு சேமிப்புக் கணக்கின் வட்டி மட்டுமே வழங்கப்படும் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
வாடிக்கையாளர்கள் ஒரு குறிப்பிட்ட ஆண்டுகளுக்கு பிக்சட் டெபாசிட் தொகை போட்டு அந்த கால அவகாசம் வரும் போது சரியாக புதுப்பிக்க வேண்டும். அவ்வாறு புதுப்பிக்கவில்லை என்றால் வங்கிகள் தாங்களாகவே புதுப்பித்துக்கொள்ளும் என்பதும் அது மட்டுமின்றி வங்கிகள் தாங்களாகவே புதுப்பித்தால் அந்த தொகைக்கு சேமிப்பு கணக்கிற்கு தரும் வட்டி மட்டுமே கொடுக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது

தற்போது பிக்சட் டெபாசிட்டிற்கு 5 சதவீதம் வட்டி வழங்கப்படும் நிலையில் சேமிப்பு கணக்கிற்கு சுமார் 3 சதவீதம் மட்டுமே வழங்கப்படுகிறது. இதனால் வாடிக்கையாளர்கள் தாங்கள் போட்ட பிக்சட் டெபாசிட்டை புதுப்பிக்க தவறினால் 2 சதவீத வட்டி இழப்பு ஏற்படும் என்பது குறிப்பிடத்தக்கது

எனவே பிக்சட் டெபாசிட்டில் முதலீடு செய்தவர்கள் கால அவகாசம் முடியும்போது வங்கிகளுக்கு சென்று அதற்குரிய விண்ணப்பத்தை பெற்று புதுப்பித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறது.

seithichurul

Trending

Exit mobile version