உலகம்

நூலகத்தில் 1957-ம் ஆண்டு படிக்க எடுத்த புத்தகத்தை, 63 ஆண்டுகளுக்குப் பிறகு திருப்பி அளித்த ஆசாமி.. அபராதம் எவ்வளவு தெரியுமா?

Published

on

இங்கிலாந்தில் 1957-ம் ஆண்டு நூலகத்திலிருந்து படிக்க எடுத்துச் சென்ற புத்தகத்தை, 63 ஆண்டுகளுக்குப் பிறகு திருப்பி அளித்த ருசிகர சம்பவம் ஒன்று நடந்துள்ளது.

தாமதமாகத் திருப்பி அனுப்பியது மட்டுமல்லாமல், “ஒருபோதும் செய்யாமல் இருப்பதை விடத் தாமதமாகச் செய்வது நல்லது” என்றும் குறிப்பிட்டுள்ளார்.

ஆனால். இந்த புத்தகத்தைத் திருப்பி அனுப்பிய நபர் தனது உண்மையான அடையாளங்களையும் மறைத்து அனுப்பியதால் யார் என்று தெரியவில்லை.

பொதுவாக நூலகத்தில் அதிகபட்சமாக 20 டாலர் வரை மட்டுமே அபராதம் விதிக்கப்படும். ஆனால் அப்படி இல்லாமல் தொடர்ந்து அபராதம் விதித்து இருந்தால் 4722 டாலர், இந்திய மதிப்பில் 3.5 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து இருக்க வேண்டும் என்று நூலகம் தெரிவித்துள்ளது.

இதுவே நம்மூர் ஆட்களாக இருந்தால் என்ன செய்து இருப்பார்கள் என்று கருத்தில் தெரிவியுங்கள்.

Trending

Exit mobile version