இந்தியா

இந்தியாவில் புதிய ‘உருமாறிய கொரோனாவால்’ 7,000 பேர் பாதிப்பு: அதிர்ச்சி ரிப்போர்ட்!

Published

on

இந்தியாவில் கடந்த ஒரு வார காலமாக புதுவகை கொரோனா வைரஸ் தொற்று கிடு கிடுவென பரவி வருகிறது. இந்த புதுவகை தொற்று முன்பை இருந்த கொரோனா தொற்றை விட மிக அதிவேகமாக பரவும் அபாயம் உள்ளது என்று எய்ம்ஸ் மருத்துவமனை தரப்பு சில நாட்களுக்கு முன்னர் எச்சரிக்கை விடுத்தது.

இந்நிலையில் இந்த புதிய உருமாறிய கொரோனா தொற்று மூலம் நாட்டில் சுமார் 7,000 பேர் வரை பாதிக்கப்பட்டிருக்கக் கூடும் என்று அதிர்ச்சியளிக்கும் தகவலைத் தந்துள்ளது CCMB விஞ்ஞானிகள் அமைப்பு.

கொரோனாவின் புதிய வகை, தற்போது மகாராஷ்டிர மாநிலத்தில் வேகமாக பரவி வருகிறது. கடந்த சில வாரங்களாக கொரோனா தொற்று, நாட்டில் படிப்படியாக குறைந்து வந்த நிலையில், தற்போது மகாராஷ்டிராவில் அது அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.

மகாராஷ்டிராவைத் தவிர கேரளா, மத்திய பிரதேசம், சத்தீஸ்கர் மற்றும் பஞ்சாப் ஆகிய மாநிலங்களிலும் இந்தப் புதிய வகை கொரோனா தொற்று பரவத் தொடங்கியுள்ளதாக தகவல்கள் வந்து கொண்டிருக்கின்றன.

தற்போது கொரோனா தொற்றுக்கு எதிராக நாட்டில் இரு வகைத் தடுப்பூசி மருந்துகள் முன்களப் பணியாளர்களுக்குச் செலுத்தப்பட்டு வருகிறது. நாட்டில் மொத்தம் உள்ள 3 கோடி முன்களப் பணியாளர்களில் சுமார் 1 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது என்றும், அடுத்து தடுப்பூசி அதிகம் தேவைப்படும் 27 கோடி பேருக்கு கொடுக்கப்படும் என்றும் மத்திய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தடுப்பூசி, புதிய வகை கொரோனா தொற்றை எதிர்கொள்ளும் திறனுடையதா என்னும் கேள்வியும் எழுந்துள்ளது.

seithichurul

Trending

Exit mobile version