சினிமா செய்திகள்

கேப்டன் மார்வெலுக்கு புரொமோஷன் செய்யும் நம்ம ஊரு நாயகிகள்!

Published

on

ப்ரை லார்சன் நடிப்பில் வரும் மார்ச் 8ம் தேதி உலகமெங்கும் வெளியாகும் பிரம்மாண்ட படம் கேப்டன் மார்வெல்.

இந்தியாவிலும், இந்தி, தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பல மொழிகளில் இந்த படம் வெளியாகிறது.

இந்த படத்தை புதுவிதமாக புரொமோட் செய்ய நினைத்த மார்வெல் வெளியீட்டு உரிமையை வாங்கிய இந்திய நிறுவனம், இந்திய நடிகைகளான தமன்னா, சமந்தா, காஜல் அகர்வால் உள்ளிட்ட நடிகைகளை, கேப்டன் மார்வெல் புகைப்படத்தின் பாதியுடன், தங்கள் பாதி புகைப்படத்தையும் இணைத்து சமூக வலைதளங்களில், படத்திற்கான புரொமோஷன் பணிகளை துவங்கி உள்ளனர்.

#herineveryhero எனும் ஹேஷ்டேகுடன் நாயகிகள் கேப்டன் மார்வெலின் புகைப்படத்தை பகிர்ந்து டிரெண்டாக்கி வருகின்றனர்.

Trending

Exit mobile version