சினிமா

ஓடிடி அப்டேட்: ஒரே நாளில் வெளியாகும் 4 சுவாரஸ்யமான படங்கள் – முழு விவரம் இங்கே!

Published

on

ஓடிடி அப்டேட்: அக்டோபர் 11 அன்று வெளியாகும் 4 புதிய படங்கள்!

சமீபகாலமாக, திரைப்படங்கள் திரையரங்குகளில் வெளியான சில வாரங்களுக்குள் ஓடிடி தளங்களில் வெளியாகி வருகின்றன. அதேசமயம், சில படங்கள் நேரடியாக ஓடிடி தளங்களில் வெளியாவதும் உண்டு. இந்த வாரம், அக்டோபர் 11, 2024 அன்று, ஒரே நாளில் 4 முக்கிய திரைப்படங்கள் வெளியாகவுள்ளன. அவை எவை, எந்த ஓடிடி தளங்களில் வெளியாகும் என்பதைக் கீழே பார்க்கலாம்.

வாழை (Vaazhai):

மாரி செல்வராஜ் இயக்கத்தில், ஆகஸ்ட் 23ம் தேதி வெளியான ‘வாழை’ திரைப்படம், அக்டோபர் 11ம் தேதி டிஸ்னி ப்ளஸ் ஹாட் ஸ்டாரில் வெளியாகவுள்ளது. இந்த திரைப்படம் மாரி செல்வராஜின் ஆழமான வாழ்க்கைப் பார்வையை வெளிப்படுத்தும் ஒரு சுவாரஸ்யமான படைப்பு.

சர்பிரா (Soorarai Pottru Hindi Remake):

சுதா கொங்கரா இயக்கத்தில் வெளியான சூரரைப் போற்று படத்தின் இந்தி ரீமேக் தான் ‘சர்பிரா’. அக்ஷய் குமார், ராதா மதன் நடிப்பில் உருவான இந்த படம் அக்டோபர் 11 அன்று டிஸ்னி ப்ளஸ் ஹாட் ஸ்டாரில் வெளியாகவுள்ளது.

லாந்தர் (Lanther):

‘ராட்சசன்’ புகழ் ராம்குமாரின் உதவி இயக்குநர் ஷாஜி சலீம் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த க்ரைம் த்ரில்லர் படம், விக்ராந்த் நடிப்பில் அக்டோபர் 11ம் தேதி ஆஹா தமிழ் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது.

படிக்காத பக்கங்கள் (Padikkatha Pakkangal):

யாஷிகா ஆனந்த் நடிப்பில் செல்வம் மாதப்பன் இயக்கத்தில் உருவான இந்த திரில்லர் படைப்பு, அக்டோபர் 11ம் தேதி சிம்ப்ளி சவுத் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது.

 

Poovizhi

Trending

Exit mobile version