சினிமா செய்திகள்

ஓடிடி தளங்களுக்கும் 3 வகையான தணிக்கை சான்றிதழ்: மத்திய அரசு உத்தரவு

Published

on

திரைப்படங்களுக்கு ’யூ’, ‘யூஏ’, மற்றும் ‘ஏ’ ஆகிய வகைகளில் தணிக்கைச் சான்றிதழ் இருப்பதுபோல் ஓடிடியில் வெளியாகும் திரைப்படங்கள் மற்றும் வெப்தொடர்களுக்கும் மூன்று வகையான தணிக்கை சான்றிதழை பயன்படுத்த வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

திரைப்படங்கள் போல் இல்லாமல் ஓடிடியில் வெளியாகும் வெப்தொடர்கள் மற்றும் நேரடியாக வெளியாகும் திரைப்படங்களில் ஆபாச காட்சிகளும் வன்முறை காட்சிகளும் அதிகபட்சமாக இருப்பதாக கடந்த சில ஆண்டுகளாக குற்றச்சாட்டு இருந்து வருகிறது. இதனை அடுத்து ஓடிடியில் வெளியாகும் திரைப்படங்களுக்கும் தணிக்கைச் சான்றிதழ் முறையை அமல்படுத்த வேண்டும் என மத்திய அரசுக்கு பல்வேறு தரப்பினர் கோரிக்கை வைத்தனர்.

இந்த நிலையில் தற்போது வெளிவந்துள்ள தகவலின்படி ஓடிடியில் வெளியாகும் திரைப்படங்களுக்கும் மூன்று வகையான தணிக்கைச் சான்றிதழ் அவசியம் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

13 வயதுக்கு உட்பட்டோர், 16 வயதுக்கு உட்பட்டோர், மற்றும் ’ஏ’ சான்றிதழ் என மூன்று வகையான தணிக்கை சான்றிதழை ஓடிடியில் வெளியாகும் படங்களுக்கும் குறிப்பிட வேண்டும் என்றும் ஓடிடி தளங்களுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவால் ஓடிடி தளங்களில் வெளியாகும் படங்களுக்கு பாதிப்பு ஏற்படுமா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Trending

Exit mobile version