சினிமா

அங்க பிரச்சனைனா இங்க வாங்க!.. வலிமைக்கு வலை விரிக்கும் ஓடிடி நிறுவனங்கள்…..

Published

on

அஜித் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் ‘வலிமை’ திரைப்படம் ஜனவரி 13ஆம் தேதி வெளியாகும் அப்படத்தின் தயாரிப்பாளர் போனிகபூர் அறிவித்துள்ளார்.

ஆனால், கொரோனா வைரஸ் மற்றும் ஒமிக்ரான் வைரஸ் பாதிப்பு காரணமாக தமிழகம் உள்பட பல்வேறு மாநிலங்களில் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக திரையரங்குகளில் 50 சதவீத பார்வையாளர்கள் மட்டுமே அனுமதி என கிட்டத்தட்ட அனைத்து மாநிலங்களிலும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளதுது.

அதேபோல் உலகின் பல நாடுகளில் திரையரங்குகள் மூடப்பட்டுள்ளன என்பதும் 50 சதவீத பார்வையாளர்கள் என்ற கட்டுப்பாடு விதிக்கப்பட்டு வருகிறது. இதன் காரணமாகத்தான் எஸ்.எஸ்.ராஜமவுலியின் ‘ஆர்.ஆர்.ஆர்’ திரைப்படம் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டது.

எனவே, ‘வலிமை’ திரைப்படத்தின் ரிலீஸ் தேதியும் தள்ளி வைக்கப்படுமா? அல்லது திட்டமிட்டபடி ரிலீஸ் ஆகுமா? என்ற கேள்வி ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் இருந்து வருகிறது.

ஒருவேளை ஜனவரி 10ம் தேதிக்கும் பின்பும் இந்த கட்டுப்பாடுகள் தொடர்ந்தால் வலிமை படம் தியேட்டரில் வெளியாக வாய்ப்பு மிகவும் குறைவு. ரிலீஸ் மீண்டும் தள்ளி வைக்க வாய்ப்பிருக்கிறது.

இந்நிலையில், இதை பயன்படுத்திகொள்ள நினைத்த முன்னணி ஓடிடி நிறுவனங்கள் போனிகபூருக்கு வலை வீசி வருகின்றனவாம். அவரும் மறுப்பு ஏதும் கூறாமால் இருந்து வருகிறாராம். 10ம் தேதிக்குள் அரசு எடுக்கும் முடிவில்தான் வலிமை எதில் ரிலீஸ் ஆகும் என்பது தெரியவரும்.

seithichurul

Trending

Exit mobile version