சினிமா செய்திகள்

அந்நியன் இந்தி ரீமேக்: ஷங்கருக்கு ஆஸ்கார் ரவிச்சந்திரன் நோட்டீஸ்?

Published

on

ஷங்கர் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் கடந்த 2015ஆம் ஆண்டு உருவான அந்நியன் திரைப்படத்தின் ஹிந்தி ரீமேக் குறித்த அறிவிப்பு சமீபத்தில் வெளிவந்தது என்பது தெரிந்ததே. இந்த படத்தில் விக்ரம் நடித்த கேரக்டரில் ரன்வீர்சிங் நடிக்க இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் அந்நியன் படத்தின் தயாரிப்பாளர் ஆஸ்கார் ரவிச்சந்திரன் அவர்கள் இயக்குனர் ஷங்கருக்கு எச்சரிக்கை விடுத்து நோட்டீஸ் அனுப்பி உள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அந்நியன் திரைப்படத்தின் கதை முழுவதும் தனக்கு சொந்தமானது என்றும் இந்த கதைக்கான முழு தொகை எழுத்தாளர் சுஜாதா அவர்களுக்கு தானே கொடுத்திருப்பதாகவும் எனவே அதன் ரீமேக் உரிமையும் தன்னிடம் மட்டுமே இருப்பதாகவும் அதையும் மீறி நீங்கள் என்னுடைய அனுமதியை பெறாமல் அந்நியன் படத்தின் ஹிந்தி ரீமேக்கில் உருவாக்க இருப்பதாக அறிவித்தது முழுக்க முழுக்க சட்டவிரோதம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் பாய்ஸ் படத்தை நீங்கள் இயக்கியதில் அந்த படம் ஏற்பட்ட தோல்வியால் பொருளாதார ரீதியில் துவண்டு இருந்தீர்கள் என்றும், அந்த நேரத்தில் நான் கொடுத்த ஒரு வாய்ப்புதான் அந்நியன் என்றும் அந்த படத்தின் வெற்றியால் தான் இன்று நீங்கள் மீண்டும் முன்னணி இயக்குனராக உள்ளீர்கள் என்றும் ஆஸ்கார் ரவிச்சந்திரன் குறிப்பிட்டுள்ளார்.

அந்த நன்றியை மறந்து தன்னுடைய அனுமதி இல்லாமல் அன்னியன் படத்தை இந்தியில் ரீமேக் செய்வது சட்டவிரோதம் என்றும் உடனடியாக இந்த படத்தின் ரீமேக் குறித்த பணிகளை நிறுத்த வேண்டும் என்றும் இல்லையேல் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ஆஸ்கார் ரவிச்சந்திரன் நோட்டீஸ் ஒன்றில் குறிப்பிட்டுள்ளார்.

Trending

Exit mobile version