சினிமா செய்திகள்
ஓரினச் சேர்க்கையாளராக நடித்த ரெஜினா – பாலிவுட்டில் குவிகிறது பாராட்டு!
ஒன்பது வயதில் ஸ்ப்லாஷ் கிட்ஸ் எனும் குழந்தைகளுக்கான டிவி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி மீடியாவுக்குள் குழந்தை பருவத்திலேயே அறிமுகமான சென்னை பொண்ணு தான் ரெஜினா கசாண்ட்ரா.
பின்னர், பிரசன்னா, லைலா நடிப்பில் வெளியான கண்ட நாள் முதல் படத்தில் குட்டி ரோலில் நடித்திருந்தார். தமிழ், தெலுங்கு, கன்னடம் என மூன்று மொழிகளில் தற்போது பல படங்களில் நடித்து வருகிறார் ரெஜினா.
ஆரம்பத்தில் ஹோம்லி கேர்ளாக அறிமுகமான ரெஜினா, கொஞ்சம் கொஞ்சமாக கவர்ச்சி கடலில் குதிக்க ஆரம்பித்தார்.
தற்போது, தென்னிந்தியாவை தாண்டி பாலிவுட்டில் சோனம் கபூர் நடிப்பில் வெளியான ஏக் லட்கி கோதேக் கதா படத்தில் அறிமுகமாகியுள்ளார்.
இந்த படத்தில் நடிப்பதையும், தனது கதாபாத்திரத்தையும் ரகசியமாக மறைத்து வந்தார் ரெஜினா. தற்போது படம் வெளியானதும், இவரது கதாபாத்திரத்தை பார்த்த பலரும் முதலில் அதிர்ச்சியுற்றனர்.
சோனம் கபூருடன் ஓரினச்சேர்க்கையில் ஈடுபடும் கதாபாத்திரத்தில் தான் ரெஜினா கசாண்ட்ரா நடித்துள்ளார்.
படம் வெற்றியான நிலையில், தற்போது பாலிவுட் முதல் கோலிவுட் வரை ரெஜினாவுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.
எந்த நடிகையும் நடிக்க துணியாத கதாபாத்திரத்தில் ரெஜினா சிறப்பாக நடித்து பாராட்டுக்களை அள்ளி வருகிறார்.