சினிமா செய்திகள்

ஆர்கானிக் ஹோலி கொண்டாடிய அமலாபால்!

Published

on

இயக்குநர் விஜய்யை விவாகரத்து செய்து கொண்ட நடிகை அமலாபால், ராட்சசன் படத்திற்கு பிறகு, நடிகைக்கு முக்கியத்துவம் வாய்ந்த கதைகளில் நடித்து வருகிறார்.

அவர், நடிப்பில் உருவாகியுள்ள அதோ அந்த பறவை போல மற்றும் ஆடை படங்கள் இறுதிகட்டத்தை எட்டியுள்ளன.

ஹோலி பண்டிகையான இன்று, ஆர்கானிக் முறையில், கெமிக்கல் கலர் பொடிகள் இல்லாமல், மஞ்சள், குங்குமம் மற்றும் பாசி கொண்டு உருவாக்கப்பட்ட கலர் பொடிகளை கொண்டு தான் ஹோலி கொண்டாடியதாகவும், இந்த நேரத்தில், தனது குடும்பத்துக்கு ஹோலி வாழ்த்துகளை சொல்ல மறக்க மாட்டேன் என அவர்களுக்கு வாழ்த்துச் செய்திகளை குறுஞ்செய்தி மூலம் அனுப்பும் புகைப்படத்தை தனது சமூக வலைதள பக்கத்தில் நடிகை அமலாபால் பதிவிட்டுள்ளார்.

பாலிவுட் நடிகர்கள் பலரும் ஹோலி பண்டிகை கொண்டாட்ட புகைப்படங்களை பதிவிட்டு வரும் நேரத்தில் நடிகை அமலாபாலும் தனது ஹோலி கொண்டாட்ட புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.

ஆனால், இந்த படத்தில் அவரின் அழகிய முகத்தை நீண்ட தொப்பி மறைத்துள்ளது ரசிகர்களுக்கு சற்று வருத்தத்தை அளித்து வருகிறது.

seithichurul

Trending

Exit mobile version