தமிழ்நாடு

புதிய காற்றழுத்த தாழ்வு எதிரொலி: 5 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை!~

Published

on

அந்தமான் அருகே ஏற்பட்டுள்ள புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக ஐந்து மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை விடப்பட்டு உள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் அந்தமான் அருகே புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி ஏற்பட்டுள்ளது என்றும், இது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி கரையை கடக்கும் என்றும் இதன் காரணமாக கன்னியாகுமரி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் அதிக மழை பெய்யும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

இந்த நிலையில் தற்போது வெளிவந்துள்ள தகவலின்படி தமிழகத்தில் 5 மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என்றும் கன்னியாகுமரி, நீலகிரி, தேனி, திண்டுக்கல் மற்றும் திருப்பூர் ஆகிய 5 மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துக்கொள்ள வேண்டும் என்றும் வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தி உள்ளது.

குறிப்பாக கன்னியாகுமரி, நீலகிரி, தேனி, திருப்பூர் மற்றும் திண்டுக்கல் ஆகிய 5 மாவட்டங்களில் மிக கனமழைக்கான ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் தமிழகம் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் பல இடங்களில் இன்று லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என்றும் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும் ஈரோடு, திருப்பத்தூர், வேலூர், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, காஞ்சீபுரம், விழுப்புரம், செங்கல்பட்டு, கோவை, சேலம், தர்மபுரி, கடலூர், அரியலூர், பெரம்பலூர், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நாளை நீலகிரி, திருப்பூர், திண்டுக்கல், வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை, தர்மபுரி, சேலம், நாமக்கல், அரியலூர், பெரம்பலூர், கடலூர், தஞ்சை, திருச்சி மற்றும் புதுக்கோட்டை ஆகிய பகுதிகளிலும் நவம்பர் 17, 18 ஆகிய தேதிகளில் தமிழகம் மற்றும் புதுவையில் அனேக இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை பொருத்தவரை அடுத்த இரண்டு நாட்களுக்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

seithichurul

Trending

Exit mobile version