தமிழ்நாடு

எடப்பாடி பழனிசாமியை பாஜக தூக்கி விட்டு ஓபிஎஸ்சை மீண்டும் முதல்வராக்கும்: தங்க தமிழ்செல்வன்!

Published

on

நேற்று நாடு முழுவதும் மக்களவை தேர்தல் முடிவுகள் வெளியானது. இதில் மத்தியில் பாஜக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடித்தது. ஆனால் தமிழகத்தில் திமுக கூட்டணி தேர்தல் நடந்த 39 தொகுதிகளில் 38 தொகுதியை கைப்பற்றியது. தேனி தொகுதியில் மட்டும் அதிமுக வேட்பாளர் வெற்றி பெற்றார்.

தேனியில் அதிமுக சார்பில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ஓ.பி.ரவீந்திரநாத் குமார் போட்டியிட்டார். அவரை எதிர்த்து திமுக கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவனும், அமமுக சார்பில் தங்க தமிழ்செல்வனும் போட்டியிட்டனர். இதில் ஈவிகேஎஸ் இளங்கோவனை விட 76693 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றிபெற்றார் ரவீந்திரநாத். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அமமுக வேட்பாளர் தங்க தமிழ்ச்செல்வன் 144050 வாக்குகள் பெற்று மூன்றாமிடம் பிடித்தார்.

இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த தங்க தமிழ்செல்வன், மோடி, பன்னீர்செல்வம் ஆசியுடன் பாஜகவுடன் கூட்டணி வைத்து அதிமுக மோசம் போய்விட்டது. மீண்டும் தமிழகத்தின் முதலமைச்சராக பன்னீர்செல்வம் வருவார். எடப்பாடி பழனிசாமியை பாஜக தூக்கி விட்டு ஓபிஎஸ்சை மீண்டும் முதல்வராக்கும். மோடியின் சொல்படிதான் அங்கு அனைத்தும் நடக்கப்போகிறது என காட்டமாக விமர்சித்தார். மேலும் ஓபிஎஸ் தனது மகன் வெற்றி பெற 500 கோடி ரூபாய் செலவு செய்ததாக குற்றம் சாட்டினார் அவர்.

Trending

Exit mobile version