தமிழ்நாடு

தொல்லை கொடுக்கும் சசிகலா… ஓ.பி.எஸ் டெல்லிக்கு திடீர் பயணம்..!

Published

on

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் திடீர் பயணமாக இன்று டெல்லி புறப்படுகிறார் என்று நம்பத் தகுந்த வட்டாரங்களில் இருந்து தகவல்கள் வந்து உள்ளன.

அவர் நாளை பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரை நேரில் சந்திப்பார் எனத் தெரிகிறது. தமிழ்நாட்டில் நிலவும் முக்கிய அரசியல் பிரச்சனைகள் குறித்தும், சமூகப் பிரச்சனைகள் குறித்தும் அவர் இந்த சந்திப்புகள் மூலம் முறையிடுவாராம்.

தமிழ்நாடு – கர்நாடகாவுக்கு இடையில் நிலவும் மேகதாது பிரச்சனைக்குத் தீர்வு காண வேண்டும் என்று அவர் டெல்லி வட்டாரத்தை வலியுறுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் சசிகலா, அதிமுகவுக்கு சில வாரங்களாக கொடுத்து வரும் அழுத்தம் குறித்தும், மத்திய அமைச்சரவையில் அதிமுகவுக்கு இடம் கொடுக்காதது பற்றியும் அவர் பேச உள்ளாராம்.

கடந்த சில வாரங்களாக ஆடியோ வெளியிட்டு, மீண்டும் அதிமுகவைக் கைப்பற்ற உள்ளதாக தெரிவித்து வரும் சசிகலா, சில நாட்களுக்கு முன்னர் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வரும் அதிமுக அவைத் தலைவர் மதுசூதனனை நேரில் சந்திக்க அதிமுக கொடியுடன் வந்தார். அப்போது எடப்பாடி பழனிசாமியும் மருத்துவமனையில் இருந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

 

Trending

Exit mobile version