தமிழ்நாடு

மாப்பிள்ளை அவர்தான்… ஆனால் சட்டை என்னுடையது: தீர்ப்பை எள்ளி நகையாடும் ஓபிஎஸ் தரப்பு!

Published

on

அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்ட பொதுக்குழுவானது செல்லாது என்று உச்சநீதிமன்றத்தை நாடியிருந்தார் ஓபிஎஸ். தமிழக அரசியலில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த இந்த வழக்கில் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக உச்சநீதிமன்றம் நேன்று அதிரடி தீர்ப்பு ஒன்றை வழங்கியது.

#image_title

இந்நிலையில் இந்த தீர்ப்பு குறித்து முதல்முறையாக மவுனம் கலைத்துள்ளது ஓபிஎஸ் தரப்பு. ஓபிஎஸ், பண்ருட்டி ராமச்சந்திரன், வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன் உள்ளிட்ட அவரது ஆதரவாளர்கள் இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய பண்ருட்டி ராமச்சந்திரன், உச்சநீதிமன்றம் ஜூலை 11-ஆம் தேதி நடந்த பொதுக்குழு செல்லும் என்றுதான் தீர்ப்பளித்திருக்கிறது. ஆனால் பொதுக்குழுவை ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் சேர்ந்துதான் கூட்ட வேண்டும் என்பது பற்றி உச்சநீதிமன்றம் ஏதும் சொல்லவில்லை.

ஐந்து நாட்கள் வாதங்களை ஏன் கேட்டார்கள் என்றே தெரியவில்லை. ஏனென்றால் எதை தீர்மானிக்க வேண்டுமோ அதை தீர்மானிக்கவில்லை என்றார். தொடர்ந்து பேசிய மனோஜ் பாண்டியன், பொதுக்குழு கூட்டப்பட்டதே செல்லாது என்றுதான் நாங்கள் நீதிமன்றம் சென்றோம். அதன் தீர்மானத்தை பற்றியே நாங்கள் சொல்லவில்லை. பொதுக்குழுவே செல்லாது என்பது தான் எங்கள் வழக்கு என்றார். அப்போது பண்ருட்டி ராமச்சந்திரன், மாப்பிள்ளை அவர்தான்… ஆனால் சட்டை என்னுடையது என்பதைப் போலத்தான் இந்தத் தீர்ப்பு என்று கூறி சிரித்தார்.

Trending

Exit mobile version