தமிழ்நாடு

ஜெ. மரண விசாரணை ஆணையத்தில் ஓபிஎஸ் ஆதரவாளர்: மாற்றக்கோரி சசிகலா தரப்பு மனு!

Published

on

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தில் பல்வேறு சந்தேகங்களும், மர்மங்களும் இருந்ததால் அதனை போக்கி நாட்டு மக்களுக்கு உண்மையை தெரிவிக்க வேண்டும் என பல்வேறு கோரிக்கைகள் எழுந்து வந்ததையடுத்து அவரது மரணம் தொடர்பாக விசாரிக்க விசாரணை ஆணையம் ஒன்று தமிழக அரசால் அமைக்கப்பட்டது.

ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் இந்த விசாரணை ஆணையம் நடைபெற்று வருகிறது. பல்வேறு தரப்பினருக்கு இந்த விசாரணை ஆணையம் சம்மன் அனுப்பி தொடர்ந்து விசாரணையை நடத்தி வருகிறது. தற்போது சசிகலா தரப்பின் குறுக்கு விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் ஆணையத்தின் செயலாளராக உள்ள கோமளாவை மாற்ற வேண்டும் என்று சசிகலா தரப்பிலிருந்து ஆணையத்தின் தலைவர் ஆறுமுகசாமியிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது. அந்த மனுவில் ஓபிஎஸ் ஆதரவாளரின் மனைவியான கோமளா, ஆணையத்தின் தகவல்களை ஓபிஎஸுக்கு ஆதரவாக வழங்குகிறார் என கூறப்பட்டுள்ளது. முன்னதாக தினகரனும் இதே குற்றச்சாட்டை வைத்திருந்தார்.

seithichurul

Trending

Exit mobile version