தமிழ்நாடு

ஓபிஎஸ் மகன் எம்பி பதவி பறிபோகிறதா? பரபரப்பு தகவல்

Published

on

முன்னாள் முதல்வர் ஓ பன்னீர்செல்வம் மகன் ரவீந்திரநாத் எம்பி வெற்றியை எதிர்த்து அமமுக சார்பில் போட்டியிட்ட தங்கத்தமிழ்செல்வன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது தெரிந்ததே. இந்த நிலையில் இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்துள்ளது.

தற்போது திமுகவில் இருக்கும் தங்கத்தமிழ்செல்வன் கடந்த பாராளுமன்ற தேர்தலின் போது அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் சார்பில் தேனி தொகுதியில் போட்டியிட்டார்.

அந்த தொகுதியில் அதிமுகவை சேர்ந்த ரவீந்திரநாத் வெற்றி பெற்றார். இந்த வெற்றியை எதிர்த்து அந்த தொகுதியில் வாக்காளர் ஒருவர் தாக்கல் செய்த வழக்கு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்தது.

இந்த நிலையில் இந்த தொகுதியில் போட்டியிட்ட தங்கத்தமிழ்செல்வன் சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று சாட்சியமளித்தார். சொத்து விவரங்களை அதிமுக எம்பி இரவீந்திரநாத் தாக்கல் செய்யவில்லை என அவர் சாட்சியத்தில் கூறியதாக தகவல் வெளியாகி உள்ளது .

இதனை அடுத்து இந்த வழக்கின் விசாரணையை ஜூன் மாதத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் தள்ளிவைத்து உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த வழக்கில் ரவீந்திரநாத் எம்பிக்கு எதிராக தீர்ப்பு வழங்கப்பட்டால் அவரது பதவிக்கு ஆபத்து என்பது குறிப்பிடத்தக்கது.

seithichurul

Trending

Exit mobile version