தமிழ்நாடு

சட்டமன்ற தேர்தலில் ஓபிஎஸ் மகன் போட்டியா?

Published

on

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் அல்லது மே மாதம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விரைவில் தேர்தல் ஆணையம் தமிழக சட்டசபை தேதி குறித்து உறுதி செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் தமிழக அரசியல் கட்சிகள் தேர்தலுக்கு தயாராகி வருகின்றன என்பதும் ஒரு பக்கம் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, இன்னொரு பக்கம் திமுக தலைவர் முக ஸ்டாலின் ஆகியோர் தீவிரமாக பிரச்சாரம் செய்து வருகின்றனர் என்பதும் தெரிந்ததே. அதுமட்டுமின்றி அதிமுக, திமுக ஆகிய இரண்டு கட்சிகளுமே கூட்டணி பேச்சு வார்த்தையை தொடங்கி விட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் அதிமுகவில் தற்போது அமைச்சர்களாக இருக்கும் அனைவருக்கும் மீண்டும் போட்டியிட வாய்ப்பு கிடைக்கும் என்றும் புதியவர்கள் 20% பேர்களுக்கு போட்டியிட வாய்ப்பு கிடைக்கும் என்று கூறப்படுகிறது. அந்த வகையில் துணை முதல்வர் ஓபிஎஸ் மகன் ஜெயபிரதீப் வரும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அவருக்கான சீட் உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் தேனி மாவட்டத்திலுள்ள ஒரு முக்கிய தொகுதியில் அவர் போட்டியிடப் போவதாகவும் கூறப்படுகிறது.

ஏற்கனவே துணை முதல்வர் ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் குமார் மக்களவை தேர்தலில் தேனி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார் என்பதும், அதிமுக கூட்டணியில் உள்ள ஒரே எம்பி அவர் மட்டும் தான் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Trending

Exit mobile version