தமிழ்நாடு

ஈ.பி.எஸ்-ஸுக்கு டேக்கா… தன்னை முன்னிலைப்படுத்தி பிரச்சார வீடியோ வெளியிட்ட ஓ.பி.எஸ்!

Published

on

இன்னும் ஒரு சில மாதங்களில் தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நடக்க உள்ளது. இதையொட்டி அரசியல் கட்சிகள் தீவிரப் பிரச்சாரங்களில் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில், தமிழக துணை முதல்வர், அதிமுகவின் ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம், ஒரு புதிய பிரச்சார வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இந்த வீடியோவில் தன்னை மட்டுமே பிரதானப்படுத்தி ஓ.பி.எஸ், ப்ரொமோ செய்துள்ளார். இதனால் மீண்டும் அதிமுகவுக்குள் உட்கட்சிப் பூசல் எழுந்திருக்கலாம் என்று சொல்லப்படுகிறது. குறிப்பாக தன்னை அதிமுகவின் முதல்வர் வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என்று மல்லுக்கட்டியவர் ஓ.பி.எஸ். ஆனால் கட்சியின் பிரதான நிர்வாகிகளின் ஆதரவு, முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கே இருந்தது. இதனால் தானே, ‘வருகின்ற சட்டமன்றத் தேர்தலுக்கு கழகத்தின் முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமிதான்’ என்று சில மாதங்களுக்கு முன்னர் சொல்லும்படி ஆனது. ஆனால், பல்வேறு வழிகளில் மீண்டும் அதிமுகவின் முதல்வர் வேட்பாளராக உருவெடுத்த பன்னீர்செல்வம் முயன்று வருவதாக தகவல்.

இன்னும் ஒரு சில நாட்களில், அதிமுகவின் முன்னாள் பொதுச் செயலாளராக இருந்த சசிகலா, சிறையிலிருந்து விடுதலை ஆகிறார். சொத்துக் குவிப்பு வழக்கில் சிறை சென்று, தண்டனைக் காலம் முடிந்து அவர் மீண்டும் விடுதலையாகிறார். அவரின் வரவும் தமிழக அரசியல் களத்தில் மிகப் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று சொல்லப்படுகிறது.

ஓ.பி.எஸ் வெளியிட்ட வீடியோ:

 

seithichurul

Trending

Exit mobile version