தமிழ்நாடு

மு.க.ஸ்டாலின் அரசைப் பாராட்டிய ஓ.பி.எஸ்..!

Published

on

தமிழத்தில் வரும் திங்கட் கிழமையான 10 ஆம் தேதி முதல், இம்மாதம் 24 ஆம் தேதி வரை முழு ஊரடங்கு அமல் செய்யப்பட உள்ளது. இந்த சமயத்தில் கல்வி நிறுவனங்கள் அனைத்தும் மூடப்பட வேண்டும் என்று உத்தரவிடப்பட்டு உள்ளது. கொரோனா தொற்றுப் பரவலைக் கட்டுக்குள் வைக்கும் நோக்கில் இந்த முழு முடக்க நடவடிக்கை அமல் செய்யப்பட உள்ளது.

இந்த ஊரடங்கு உத்தரவுகளில் அளிக்கப்பட்டுள்ள தளர்வுகளைப் பாராட்டி அறிக்கை வெளியிட்டுள்ளார் அதிமுகவின் தலைமை ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம்:-

கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வரும் இச்சூழலில் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டு இருப்பது நோய் தொற்று பரவலின் தீவிரத்தைக் கட்டுப்படுத்திட பேருதவியாக இருக்கும். எளியோரின் பசி தீர்க்கும் அம்மா உணவகங்கள் ஊரடங்கு காலத்தில் தொடர்ந்து செயல்பட அனுமதிக்கப்பட்டு இருப்பதையும் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டதையும் வரவேற்கிறேன்.

நோய் தொற்றின் தீவிரத்தை உணர்ந்து அரசு கட்டுப்பாடுகளை முறையாகக் கடைபிடித்து, மிகுந்த கவனமுடன் இருக்க வேண்டும் என பொது மக்களையும் அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அதிமுக சார்பில் இல்லாமல் தனிப்பட்ட முறையில் அறிக்கை வெளியிட்டுள்ளார் பன்னீர்செல்வம். இது அதிமுக வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

 

author avatar
seithichurul

Trending

Exit mobile version