தமிழ்நாடு

சொந்த தொகுதியிலேயே ஓபிஎஸ்-க்கு எதிர்ப்பா? எதிர்ப்பு முழக்கத்தால் பரபரப்பு!

Published

on

தமிழகத்தில் ஏப்ரல் 2ஆம் தேதி சட்டமன்ற பொதுத்தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் இந்த தேர்தலில் ஏற்கனவே போட்டியிட்ட அமைச்சர்கள் பெரும்பாலானோர் மீண்டும் போட்டியிடுகின்றனர். அதேபோல் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தான் போட்டியிட்ட எட்ப்பாடி தொகுதியிலும், துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் அவர்கள் தான் போட்டியிட்ட போடி தொகுதிகளில் போட்டியிடுகிறார்.

இந்த நிலையில் துணை முதல்வர் ஓபிஎஸ் அவர்கள் தான் போட்டியிடும் போடி தொகுதியில் நேற்று தேர்தல் பிரச்சாரத்தை ஆரம்பித்தார். அப்போது திடீரென ஓபிஎஸ்-க்கு எதிராக அந்த பகுதி மக்கள் சிலர் கோஷம் போட்டதாக கூறப்படுகிறது.

துணை முதல்வர் ஓபிஎஸ், பிரசாரத்தை தொடங்கிய முதல் நாளிலேயே அவருக்கு எதிராக கடும் எதிர்ப்பு அந்த பகுதி மக்கள் தெரிவித்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சொந்த தொகுதி மக்களே அவருக்கு எதிராக முழக்கமிடுவதால் அவரது வெற்றி கேள்விக்குறி என்றும் கூறப்பட்டது.

ஆனால் இது திமுகவினரின் சதி என்றும் ஓபிஎஸ்-க்கு சொந்த தொகுதியில் நல்ல செல்வாக்கு இருக்கிறது என்றும் அவர் மீண்டும் எளிதில் வெற்றி பெறுவார் என்று அதிமுக நிர்வாகிகள் கூறி வருகின்றனர்.

Trending

Exit mobile version