தமிழ்நாடு

எதிர்க்கட்சி தலைவர் யார்? இன்றைய அதிமுக கூட்டத்தில் முடிவு!

Published

on

சமீபத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் ஆட்சியைப் பறி கொடுத்த அதிமுக வெறும் 65 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது என்பதும் இதனால் அந்த கட்சி எதிர்க்கட்சி அந்தஸ்தை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் எதிர்க்கட்சி தலைவரை தேர்வு செய்ய கடந்த 7ஆம் தேதி அதிமுக நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் எதிர்க்கட்சி தலைவராக ஓபிஎஸ் அவர்களை தேர்வு செய்ய வேண்டும் என்று அவரது ஆதரவாளர்களும், ஈபிஎஸ் அவர்களை தேர்வு செய்ய வேண்டும் என்று அவரது ஆதரவாளர்களும் கோஷமிட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனை அடுத்து எதிர்க்கட்சித் தலைவரை முடிவு செய்யாமல் கூட்டம் மே 10ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

இந்த நிலையில் இன்று மீண்டும் அதிமுக நிர்வாகிகள் கூட்டம் நடைபெற இருக்கும் நிலையில் இன்றைய கூட்டத்தில் ஓபிஎஸ் ஈபிஎஸ் ஆகிய இருவரில் ஒருவர் விட்டுக்கொடுத்து எதிர்க்கட்சி தலைவரை ஒருமனதாக தேர்வு செய்ய செல்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இன்று காலை 09.30 மணிக்கு நடைபெறும் இந்த கூட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர் ஒருமனதாக செய்யப்படுவார் என்றும் அனேகமாக ஓபிஎஸ் எதிர்க்கட்சி தலைவராக தேர்வு செய்யப்பட அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

மேலும் கேபி முனுசாமி மற்றும் வைத்திலிங்கம் ஆகிய இருவரும் ஏற்கனவே மாநிலங்களவை உறுப்பினராக இருக்கும் நிலையில் சட்டமன்ற தேர்தலிலும் போட்டியிட்டு வெற்றி பெற்று உள்ளனர். இவர்கள் எந்த பதவியை தக்க வைத்துக் கொள்வார்கள், எந்த பதவியை ராஜினாமா செய்வார்கள் என்பது குறித்தும் இன்று முடிவு செய்யப்படும் என தகவல்கள் வெளியாகி உள்ளன.

Trending

Exit mobile version