தமிழ்நாடு

ஒன்றிய அரசு என கூறுவது நியாயம் இல்லை – ஓபிஎஸ் ஆதங்கம்!

Published

on

தமிழ்நாடு அரசு, இந்திய அரசை ஒன்றிய அரசு என்று கூறுவது நியாயமில்லை என்று அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர், ‘திமுக ஆட்சி தமிழ்நாட்டில் அமைந்ததிலிருந்து மத்திய அரசை ‘ஒன்றிய அரசு’ என்று குறிப்பிட்டு வருவது வாடிக்கையாகிவிட்டது. இதற்கான காரணத்தை தமிழ்நாடு முதல்வர் சட்டப்பேரவையிலேயே அளித்து இருப்பது விசித்திரமாக இருக்கிறது. சட்ட சாசனத்திலேயே இந்திய ஒன்றியம் என்று தான் சொல்லப்பட்டு இருக்கிறது என்றும், அது தவறான சொல் அல்ல என்றும் முதல்வர் கூறியிருக்கிறார்.

ஆனால், அது பொருள் அல்ல. அரசியல் அமைப்புச் சட்டத்தின்படி, யூனியன் என்றால் பல்வேறு அமைப்புகள் உள்ளடக்கிய இந்திய நாட்டைக் குறிக்கும் சொல்லே தவிர இந்திய அரசை குறிக்கும் சொல் அல்ல. எனவே, ‘யூனியன் ஆஃப் ஸ்டேட்ஸ்’ என்பதற்கு பொருள் ‘மாநிலங்களை உள்ளடக்கிய யூனியன்’ என்பது தான். எனவே ‘ஒன்றிய அரசு’ என்று குறிப்பிடுகிறோம் என்பதில் நியாயம் இருப்பதாகத் தெரியவில்லை. இந்த ஒப்பீடு பொருத்தமானதாக இல்லை.

நாட்டுப்பற்றை தட்டியெழுப்பும் மந்திர சொல்லான ஜெய்ஹிந்த் சொல்லை இழிவுபடுத்தும் வகையில், இந்திய இறையாண்மைக்கு எதிராக சட்டமன்ற உறுப்பினர் ஈஸ்வரன் அவர்கள் பேசிய வார்த்தைகளை அவைக் குறிப்பிலிருந்து நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென முதலமைச்சர் அவர்களை கேட்டுக்கொள்கிறேன்’ என்று கூறியுள்ளார்.

author avatar
seithichurul

Trending

Exit mobile version