தமிழ்நாடு

முத்துராமலிங்க தேவரின் பெயரை வைக்க ஓபிஎஸ் அனுமதி மறுத்தார்: சு.சாமி அதிரடி!

Published

on

மதுரை விமான நிலையத்துக்கு முத்துராமலிங்க தேவரின் பெயரை வைக்க வேண்டும் என்ற கோரிக்கை ஒன்று எழுந்து வருகிறது. ஆனால் இதற்கு 2001-ஆம் ஆண்டு முதல்வராக இருந்த ஓபிஎஸ் அனுமதி மறுத்ததாக பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.

மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமியிடம் செய்தியாளர்கள் தேர்தல் பிரச்சாரப் பேச்சாளர்கள் பட்டியலில் தங்களின் பெயர் இடம்பெறாதது குறித்து கேள்வி எழுப்பினர். இதற்கு பதில் அளித்த அவர், அப்பட்டியலில் எனது பெயர் இருக்காது. ஏனென்றால் எனக்கு இவர்களது கொள்கைகள் பிடிக்காது.

கூட்டணி ஏதும் இல்லாமல் தேர்தலில் தனித்து போட்டியிட வேண்டும் என நான் அறிவுறுத்தினேன். பாஜகவுக்கென்று தனிப்பட்ட கொள்கைகள் உண்டு. இந்து மதத்தின் பாதுகாப்புக்காக நாம் பேசி வருகிறோம். தமிழகத்திலும் பாஜக தனித்துப் போட்டியிட வேண்டும் என கூறினார். மேலும் பாஜகவுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டது குறித்தும் விமர்சித்தார். இதனையடுத்து மதுரை விமான நிலையத்துக்கு முத்துராமலிங்க தேவரின் பெயர் சூட்டுவது குறித்து கேள்வி எழுப்பினர் செய்தியாளர்கள்.

இதற்கு பதில் அளித்த அவர், மதுரை விமான நிலையத்துக்கு முத்துராமலிங்க தேவர் பெயர் சூட்டுவதற்கு இரண்டு முறை நான் முயற்சி செய்தேன். மதுரையில் விமான நிலையம் அமைப்பதும் என்னுடைய திட்டம்தான். முத்துராமலிங்க தேவரின் பெயரைச் சூட்டுவதற்கு அமைச்சரவையில் அப்போது மத்திய சிவில் விமான போக்குவரத்து அமைச்சராக இருந்த சரத் யாதவ் ஒப்புதல் பெற்றார். விமான நிலையத்துக்குப் பெயர் சூட்ட மாநில அரசின் அனுமதி பெற வேண்டும் என்று விதிமுறை உள்ளது. மதுரை விமான நிலையத்துக்கு முத்துராமலிங்க தேவரின் பெயர் சூட்ட மாநில அரசிடம் ஒப்புதல் கேட்டபோது, அப்போது தமிழக முதல்வராக இருந்த ஓபிஎஸ் அனுமதி மறுத்துவிட்டார் என தெரிவித்தார்.

seithichurul

Trending

Exit mobile version