தமிழ்நாடு

ஓ.பி.எஸ்-ஐ சரிசமமாக அமர்த்திய முதல்வர் ஸ்டாலின்; 2016ல் நடந்ததுடன் ஒப்பீடு!

Published

on

2021 சட்டமன்றத் தேர்தலில் தனிப் பெரும்பான்மை பெற்று ஆட்சியமைக்கு உரிமை கோரியது திராவிட முன்னேற்றக் கழகம். அக்கட்சியின் சார்பில் அதன் தலைவர் மு.க.ஸ்டாலினை திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் ஒரு மனதாக முதல்வர் பொறுப்புக்கு தேர்வு செய்தனர். அதைத் தொடர்ந்து இன்று ஸ்டாலின் மற்றும் தமிழக அமைச்சரவையின் பதவியேற்பு நிகழ்ச்சி, சென்னை, கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் கொரோனா கட்டுப்பாடுகளுடன் எளிமையாக நடந்து முடிந்தது.

இன்றைய நிகழ்ச்சியின் போது தமிழக அமைச்சரவையில் இருக்கும் ஒவ்வொரு அமைச்சரும் தனித் தனியாக உறுமொழி சொல்லி தங்களது பொறுப்புகளை ஏற்றுக் கொண்டனர்.

இப்படியான சூழலில் கடந்த 2016 ஆம் ஆண்டு முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான அமைச்சரவை பதவியேற்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

அத்துடன் அப்போது ஜெயலலிதா தலைமையிலான பதவியேற்பு விழாவில் மரியாதை நிமித்தமாக திமுக சார்பில் மு.க.ஸ்டாலின் தனது சகாக்களுடன் கலந்து கொண்டார். அப்படி கலந்து கொண்ட ஸ்டாலினுக்கு பல வரிசைகள் தாண்டித் தான் நாற்காலி போடப்பட்டது. அதே நேரத்தில் அதிமுக தரப்பில் இன்று ஸ்டாலினின் பதவியேற்பில் கலந்து கொண்ட முன்னாள் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு, முதல்வர் ஆளுநருடன் சேர்ந்து உணவருந்த நாற்காலி போடப்பட்டிருந்தது.

இந்த இரு நிகழ்வையும் ஒப்பிட்டுப் பலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

 

author avatar
seithichurul

Trending

Exit mobile version